

ஓ மனமே!
இறந்து போன வினாடிகள்
ஒவ்வொன்றும் ...
மரணத்தை நோக்கி
என்னை அழைத்து வந்ததை
நீ அறிவாயா..?
நீ பார்த்தும்
பார்க்காமலும் வைக்கும்
ஒவ்வொரு பாத அடிகளுக்குள்ளும்
என் மரணம் பதுங்கி இருப்பதை
நீ உணர்ந்து கொள்
என் மனமே...
உன் ஆசைகள் அடங்கினாலும்
அடங்காவிட்டாலும்....!
உனக்காக ஒதுக்கப்பட்ட
நேரம் வந்ததும் நீ
ஒரு நொடியேனும் முற்படுத்தவோ..
பிற்படுத்தவோ மாட்டாய்!
நீ விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் - மரணம்
உன்னை சுவைத்தே தீரும்..
உணர்ந்து கொள் என் மனமே..!
No comments:
Post a Comment