26 Jan 2010அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவை நான்
சிறகுகள் எனக்கிருந்தும்
சிறகடிக்க தெரியாது தவித்தேன்
வானத்தில் பறக்க ஆசை வந்தும்
தனிமையில் பறக்க வெறுத்தேன்..!!

பறக்கும் பறவைகளை கண்டு
பலநாட்கள் ஏங்கினேன்.
என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை
என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது..

எனக்கு பறவை மொழி கற்று தந்தது
நானும் கற்றேன் மொழியை...
மறந்தேன் என் தாய் மொழியை

இறக்கைவிரித்து பறந்தேன்
வானத்தில் பறந்த போது
என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே
சின்னதாகவே இருந்தன..

நிஜத்தை தொலைத்தேன்
நிழலாக பறந்தேன் வானத்தில்..
நிஜம் எது நிழல் எது என
குழம்பினேன் நானும்..

நந்தவனத்தில் இருந்த இனிமை
எனக்கு கிடைக்கவில்லை வானில்
நிஜத்தை தொலைத்த போது
நிழல்களும் என்னை விட்டு நீங்கின..!!

வானில் என்னோடு பறந்த
பறவையும் தன்னிருப்பிடம்
சென்றுவிட..

நானோ மீண்டும் அநாதையாகி
மொழி தெரிந்து மெளனி ஆனேன்
எங்கே செல்வது என்று தெரியாது
அந்தரத்தில் பறந்தபடி யோசித்தேன்..

அந்த பரந்த வானில் இன்னோர்
அழகிய பறவை சிறகடித்து
பறந்து வந்து தவித்த என்னிடம்
நிஜத்தை கற்பித்தது அன்பாக..

இன்று நான் அப்பறவையுடன்
என் அழகிய நந்தவனத்தில்
நிஜத்துடன் வாழ்கிறேன்
நிழலாக வாழாமல்..!

16 Jan 2010
..அவன் போருக்கு போனான்
நான் போர்களம் ஆனேன்..

11 Jan 2010

அர்த்தமுள்ள வாழ்க்கையை
அநியாயமாக்கிவிட்டேன்

ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
என்ற வாழ்க்கையைக்
கற்றுக்கொள்ளுங்கள்
இல்லையேல்
ஒவ்வொரு விடியலும்
தூக்குக்கைதியின் கடைசிப்
பகலைப்போல்
உங்களுக்கும்...

எட்டிப்பார்க்க முடியாமல்
தவிக்கும்
எரிபந்தம் விழுந்த
வாழ்க்கை
என் வாழ்க்கை...

ஒவ்வொரு கணமும்
ஒவ்வொன்றாக இறக்கிறேன்...

நீ இல்லை!

கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
நான் கஷ்டப்படும் போது
ஆறுதல் சொல்ல
இங்கு ....
நீ இல்லை!

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்...
வரும் உன்னிடம்!

கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல

மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்

வாசிக்கப்படாமல் போன
பலபக்கங்கள் கொண்டு
வாழ்கைப் புத்தகம்
எழுதுவோம்

அனுபவக்காற்றைச்
சுவைத்து
வாழ்க்கை வரம்புகளில்
வழுக்காமல்
நடப்போம்

9 Jan 2010

ஏமாற்றம்...
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும்
இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோ என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

"வாழ்க்கைப் பாடம்"ஆறடி மண்ணுக்குள் போவதற்கு
துடிக்கின்றாயே உன்னை
துடி துடிக்க உன்னை விட்டுச்
சென்றவனை நினைத்து....

ஒரு கணம் நில் பெண்ணே
உன் வாழ்க்கை காதல்
என்னும் சக்கரத்தை மட்டும்
சுற்றி அமைக்கப் படவில்லையே....

பரந்து விரிந்து கிடக்கும்
பூமியெங்கும் இயற்கை
விரிந்து காட்சியளிக்கின்றது
மத்தளம் போல்....

மரம் பூவையிழந்து
கனியைத் தருகின்றது....

வானம் முகிலை இழந்து
மழையத் தருகின்றது....

விறகு தன்னை எரித்து
எமக்கு ஒளி தருகின்றது...

கற்கள் பல அடிகள் தாங்கி
அழகிய சிற்பமாய் உருவெடுக்கின்றது....

ஒன்றில் இருந்து இன்னொன்றாக
உருவெடுக்கின்றது இயற்கை...

நீ மட்டும் ஏன் இழந்ததை
நினைத்து உன்னை இழக்கின்றாய்..

வாங்கும் வலிகளையும் அடிகளையும்
வாழ்க்கையின் பாடமாய் ஏற்று
உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....

'வாழும் காதல்'மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்..
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....

கண்கள் கண்டதால்


உன்னையும் என்னையும்
படைத்தவன் இறைவன்....
அவனுக்கு எங்கே
போனது இதயம்....!

உன்னையும் என்னையும்
இணைப்பவன் எவனோ....
அவனுக்கு கொடுப்பேன்
என் இதயம்....!

விழிகளால் கவிதைகள்
வியப்பிலே மயங்கிப்
போனேன்....

வார்த்தைகள் ஒன்றும்
வரவில்லை
உன்னைப் பார்த்ததும்
ஊமையாகிப் போனேன்.....

உன் மனம்
என்னோடு;;
உனக்குப் புரியவில்லையா

உன் சுவாசக்காற்றில்
என்னை உன் உயிராய்
ஏற்றுக் கொள்வாயா.......

பாதையில் பார்த்த உறவு
பாசமாய்ப் போகவேண்டும்...
பயணமாய்த் தொடரும் இரவு
பந்தமாய்ப் போகவேண்டும்...

நீ... இல்லா நிணைவு
எனக்கு நரகம் ..
நீ... இல்லா வாழ்க்கை
எனக்கு மரணம் ..

விழி சிந்திய பனித்துளிகள்

காலங்கள் கடந்த பின்னும்
கால் தடங்கள் மாறாது
வேரூன்றி நிற்கிறது
மனதில் எழுந்த
தீராத நினைவுகள்

திறமைகள் பல இருந்தும்
பருவச் சுமைகளால்
தடம் மறைய நாட்கள்
தடம் மாறியே சென்றது

கற்க வேண்டிய கல்வியும்
வசதியான வாழ்வும்
புகழோடு கிடைத்தது
அகவை பல கடந்த பின் ...

வேதனை என்ற சொல்லுக்கு
அர்த்தம் ஒன்றைக் கண்டுபிடித்து
சோகம் என்ற சொல்லால்
சோதித்து
வரைவிலக்கணம் கொடுக்க
இயலாத வாழ்வினை
கவியினால் வடித்து
மற்றவர் முன்னிலையில்
அனுதாபம் அடைந்த
சுமையான நாட்களை எண்ணி
விழி சிந்தியது பனித்துளிகளை

புரண்டு படுக்கையில்
தொலைந்துபோன
தூக்கத்தை உணர்த்தியது
விழிகள்.........

மறக்க வேண்டிய நினைவுகள்
மறையாது மனதில் நின்றதால்
காரணங்கள் பல இருந்தும்
ஊமையானது வார்த்தைகள்

கடந்து வந்த
கசப்பான நாட்களை
கனவிலும் எண்ணாது
வாழ்க்கைக்கு உயிரூட்டி
புது உலகில் இவள்


பாரதி,
மண்டபம் முகாம்

5 Jan 2010

*....எங்கேனும் ஒரு மூலையில்....*


தேடித் தேடி
சலித்துவிட்டது.

பேருந்துகளிலும்
ரயில் வண்டிகளிலும்
ஒவ்வொரு சன்னலாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்
நீதானா என்று?

நேற்றுக் கூட..
உன் வருகைக்காக!

கடற்கரை முதல்
கோவில் வாசல் வரை
ஒவ்வோர் இடங்களிலும்
உனக்கான என் தேடல்
இன்னும் ஓய்ந்த பாடில்லை!

நண்பர்கள்
நகைக்கிறார்கள்
நகைக்கட்டும்!

பெற்றோர்கள்
வெறுக்கிறார்கள்
வெறுக்கட்டும்!

உடன் பிறப்புகள்
உதறுகிறார்கள்
உதறட்டும்!

பெரியவர்கள்
அறிவுறுத்துகிறார்கள்.
அறிவுறுத்தட்டும்!

எனக்கு
நீ மட்டும் தான்
வேண்டும்!
உன் பார்வை
மட்டும் தான்!

உன்னைத் தேடுவேன்
என் விழிகள்
பனிக்கும் வரை!

எந்தச் செடியில்
பூத்துக் கிடக்கிறாய்?

து£க்கத்தில் மட்டுமே
வந்து போகும் நீ
நேரிலே
வர மாட்டாயா?

சிலசமயம்
நடுக்கனவில்
எழுந்து விடுகிறேன்
உன்னைக் காண்பதற்கு!

மனதெல்லாம்
நிறைந்திருக்கும் உனக்கு
என்னபெயர் வைப்பதென்று
யோசித்து யோசித்து
கடைசியாக
என்பெயரில் பாதியையே
வைத்து விட்டேன்.

எங்கே இருக்கிறாய்?
ஒரே ஒருமுறை
காட்சி தா!

உன் வருகைக்கான
நம்பிக்கைகளுடன்
கொக்காய் காத்திருக்கிறேன்

--கே.ஆர்.விஜய்--

உறவு ஒன்று புதிதாய் உருவாகும்....


உறவு ஒன்று புதிதாய் உருவாகும்
உருவங்கள் உணராமலும்
வேறெவரும் உரிமைபெற உள்ளம் மறுக்கும்
எமக்கு மட்டும் சொந்தமானது
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவரின்
ஏன் ??? என்று பலவகை வினாக்கள் எழும்
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்
விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பரிமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழ்க்கைத் தொடரின்
அடுத்த காட்சி அரங்கேறும்

-கத்துக்குட்டி-

காதலே உன்னை என்ன செய்ய!!!!!!!!!பகலா இரவா புரியாத காலநிலை
எப்போதுமின்றி
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது
என்னை அந்தரத்தில்
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது

சில மணித்தியால சலனங்கள்
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்

ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது
அன்பாய் உன்னை வருட முடியாது
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்

அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக

என் உணர்வுகளே உங்களுக்கு !
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை
எப்போதும்
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்
போவதுமில்லை இப்போ.
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக
இன்னும் எத்தனை காலம்தான் நான்..

வயது வரம்புகள்
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்
பார்க்காது
வினோதமான உறவுகளை எப்போதும்
விதைத்த படி நீ.
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்
என்னுடனே
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்

என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய.

//றஞ்சினி//

ரகசியம்......உனக்கும்
எனக்கும்
ஆயிரம் இருக்கும்
உள்ளுக்குள்
சொல்லிக்கொள்ளாதபோது...

என்றாவது
ஒரு நாள்
உடைந்துபோகலாம்..
உன்
உண்மை நடத்தையில்!

அப்படி
ஒரு நிகழ்வு
இருவருக்கும்
நேரிடினும்
சொல்லாமல்
தவிர்த்துக் கொள்வோம்
நம்
உறவில்....

உன்னைத்தவிர


உன்னுடைய பிரிவில்
உன்னைத்தவிர எல்லோரிடமும்
பேச முடிகிறது.... ஆனால்,
எல்லோரிடமும் உன்னைத்தவிர
வேறெதுவும் பேச முடிவதில்லை......

கீதாசாரம்எதை நீ படித்தாய்
மறந்து போவதற்கு

எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்


எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்

Hi2 World Chat

Tamil Chat

4 Jan 2010

மன்றம் வந்த தென்றலுக்கு
படம்: மௌன ராகம்


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே என் கண்ணே
பூபாளமே கூடாதென்னும்
வானம் உண்டோ சொல்

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஒடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன வா

- கவிஞர் வாலி

இன்றைய இளைஞர்கள்

சோற்றுக்கே வழி இல்லை
சோனி எரிக்சனோடு போராட்டம்!
ஏறுபிடிக்கும் கலாச்சாரம் மறந்து
ஏர்செல்லோடு திண்டாடிக் கொண்டிருந்தாயே!
நோக்கத்தை மறந்து விட்டு
நோக்கியாவோடு என்னய்யா பேச்சு
எதிர்காலம் புதைந்து கொண்டிருக்கிறது
நீ சாம்சங்கோடு இசைமழையில் நனைந்து
கொண்டுருக்கிறாயா!
நம் முன்னோர்கள் போராட்டத்தின் வாரிசுகள்
இன்றைய இளைஞர்கள் வோடோபோனின்
இரசிகர்கள்!

- சந்தோஷ்ராஜ்

நீ

தனிமையை உணர்கிறேன்
என்னை சுற்றி எல்லோரும்
இருந்தும்
நீ இல்லையே

ஒவ்வோரு அரிசியிலும் கூட
உரியவர் பெயராம்
அப்படி எனில் உன் உதட்டில்
என் பெயரா?

என் நினைவு தேக்கத்தை - நீ
நிறைத்துவிட்டாய்போல
புதிய நிகழ்வுகள் எதுவும்
நினைவில் நிலைப்பதில்லையே

நான் இழந்ததற்க்கும்
இழப்பதற்க்கும் ஈடு செய்பவ
ன் நீ தானே
என் உயிரின் உதிரமும் நீ
உதிரத்தின் உயிரும் நீ

கடந்துவந்த பாதைகளில்
மைல்கற்கல் அனைத்திலும் நீ
உன்னை நெருங்கியபோதும்
உன்னை விட்டு விலகியபோதும்

எனக்கான நிமிடங்களின்
எண்ணிக்கை குறைத்து
அதை
உனக்கான நிமிடமாக உயிர் கொடுத்தேன்
உயிர் வாழ உன் நினைவு போதும் என்றால்
மரணம் என்னிடத்தில்
மரணிக்கும்

எத்தனை முறை சொன்னார்கள்
காதல்
பசி அடக்கும்
ருசி அடக்கும்
கவிதைகள் வடிக்கும்
கனவுகள் படைக்கும்
உயிரை கறைக்கும்
உண்மை என்றேன்,
உன்னை கண்டபின்...

- தமிழ்மணி

திருமண வாழ்க்கைகாலங்கள் கடந்தன
கணப்பொழுதினிலே!

ஆண்டுகள் கடந்தன
விதி வழியினிலே!

மணமான மலர்பாதையானது
இருமனம் சேர்ந்த
திருமண பயணம்!

உயிர் கலந்த உறவு இது
என்று உலகம் உணர
உதித்தது புதிய நிலா!

சோகங்களை புன்னகை
வென்றது!
சுமைகளை நம் இமைகள்
வென்றது!

போதாது இருவர்க்கும்
நூறாண்டுகள்!
வரமாக கேட்கிறேன்
இன்னும் நூறண்டுகள்!

நரை கூடிப்பழுத்தாலும்
உயிர் காதல் உதிராது!

வாழ்த்த வயதில்லை
கவிபாடுது சிறுநெஞ்சம்!

- ஈஸ்வரி

சும்மா இருத்தலின் சுகம்

சோதனைகளால் நிறைந்து
வழிகிறது வாழ்க்கை
வழுக்கி விழுதலின்
ஒவ்வோர் பொழுதுகளிலும்
உண்டாகும் காயங்களை
தாங்குகிற மனசுக்கு
அதனால் உண்டாகும்
அழுத்தங்களைத் தாங்க
முடிவதில்லை,
தேர்த்திருவிழாவின்
நிறைந்த கூட்டத்தோடு
கூட்டமாய்
அள்ளுண்டு செல்லுதற்கே
அவாவுகிறது மனம்,

வடத்தை
இழுத்துத்தான் தேர் அசைவதில்லை
பிடிக்கவே அசையும்
இது
சேர்ந்திழுத்தலின் சிறப்புமட்டுமல்ல
ஆரென்றே தெரியாமல்
இழுத்துவிடுகிற
அற்புதவரமும் கூட,
ஏனெனில்
நானும் இழுத்தேன் என்கிற
புகழின் மகிழ்வைக்கூட
மனசால் இப்போது
தாங்கமுடிவதில்லை
அதாவது..
ஏதும் சுமைகளற்று இயங்குதல்
விடை பெறுதல்.

தி.திருக்குமரன்

இனிதே நிறைவுறட்டும்.. (Wednesday, October 21, 2009 at 8:17pm)

இத்தோடு என் வாழ்வு
இனிதே நிறைவுறட்டும்
பத்தோடு பதினொன்றாய் ஆகி
பலர் பார்வை
பரிதாபமாய் என்னைப்பார்த்து
அடபாவம்..!
’செத்தே இவன் வாழ்ந்து செத்தான்’
எனச்சொல்லும்
சிதழூறும் வார்த்தைகளைக்
கேட்பதற்குள் ஆண்டவனே!
இத்தோடென் வாழ்வு
இனிதே நிறைவுறட்டும்,

பட்டுப்பட்டு மனம்
பக்குவம் தான் பட்டாலும்
வெட்டுப்பட்ட தடம்
வெறுங்கோடாய்ப்போனாலும்
‘கட்டை விரல் சிதைந்தவலி
காலெடுத்தும் இருப்பது போல்
அறுத்தெறிந்த பல்லி
வால் கிடந்து துடிப்பதுபோல்’
சுட்ட நினைவலைகள்
சூடேறி மன என்பின்
மச்சை கொதித்துருகி
வெடித்தொழுகவைக்கிறது,

அதிக கொதி நிலையில்
அளவற்ற மனச்சுமையில்
இதயம் இயலாமற் பொசுங்கி
மற்றவர்கள்
ஆவியாய் நான்
ஆகிப்போவதனைக் கண்ணுற்று
தேவையா? எனச்சொல்லித்
தெருவெல்லாம் வடிப்பதனை
பாவியேன் பார்த்தழுந்த
வேண்டுமோ..? நல்லூரா!

இருக்கின்ற நிமிர்வோடும்
எதைக்கண்டும் கலங்காத
தருக்கன் எனும் கலகப்பேரோடும்
அன்புக்கு
உருகித்தலை சாய்ந்துயிர்
கொடுப்பான் என்கின்ற
இன்பப்பொழுதொன்றின்
இதத்தோடும் தடத்தோடும்
இத்தோடென் வாழ்வு
இனிதே நிறைவுறட்டும்.

தி.திருக்குமரன்

அணையாத தீபம்...

அந்த விளக்கு இன்னும்
எரிந்து கொண்டே இருக்கிறது

நீ பிறந்திருந்தபோதில்
பாம்பெறும்பு அண்டாமல்
பக்கத்தில் ரா விளக்காய்
இதுவே எரிந்து கொண்டிருந்தது

வெட்கத்தை விட்டுச்சொல்வதானால்
நீ கருவில் உருவாகையிலும் கூட
காமாட்சி விளக்காய்
கை கொடுத்ததும் இதுவே,

மின்சாரத்தூணையே காணாத
எம் ஊரின்
கும்மிருட்டு வீடுகளில்
பகலில் கூட
இதனைத்தணித்து வைக்கவே
முடிந்தது,

நீ பள்ளிக்காலங்களில்
படிக்கின்ற போதும்
பாசறைக்காலங்களில்
படைக்கின்ற போதும்
உனக்கு
வெளிச்சமாய் இருந்ததும்
இவ்விளக்கே..

வழமை போலவே இன்றும்
காதைப்பிளக்கின்ற
குண்டோசைகளை நோக்கி
’பாலை மரம் போல
நீ போனாய்
பலர் சூழப்படத்துண்டாய்
வீடு வந்தாய்’

வாழ்வே இருண்ட பிறகு
வீட்டில் என்ன வெளிச்சம் என
எண்ணியும் கூட
அந்த விளக்கை என்னால்
அணைக்க முடியவில்லை

கால நினைவுகளைச் சுமந்தபடி
இப்பொழுதும்
அதே அந்த விளக்குத்தான்
ஒளி சிந்திக்கொண்டிருக்கிறது
உந்தன்
படத்தின் முன்னால்...

தி.திருக்குமரன்

’சா’ பற்றி எண்ண(ச்) சஞ்சலங்கள்என் பின்னால் சா தொடர்ந்து

இழுபட்டு வருகிறது...

பிறந்தது முன்னிருந்து

பிறப்பறுக்க வென்றெந்தன்

பின்னாலே சா தொடர்ந்து

இறப்பதற்கு வருகிறது,

நான் பெரியாள் ’நான்’ என்று

நாட்டாண்மை காட்டையிலும்

பதவிக்கதிரை புகழ் பகர்கையிலும்

இழவொன்றில்

அனாவசியச் சாவென்று

அலசையிலும்,பிடரியின் பின்

சந்தர்ப்பம் பார்த்தபடி

சாலத்தில் நிற்கிறது,

உள் உருக்கும் உடல் நோயில்

ஓடுகின்ற வாகனத்தில்

மெல்ல மெல்ல குறி தேரும்

குழல் இரும்பு விசைஙுனியில்

முக்கியமாய் என் வாயில்,

வாழ்க்கை வரைந்திட்ட

வண்ணக் கனவுகளை

வழித்துத்துடைத்தபடி வருகிறது

வருகிறது..

நான் பிறக்கும் போதே

உடன் பிறந்து போகையிலும்

ஒன்றாக உடன்கட்டை

ஏறிடுவேன் என்பதுவாய்

”எனது சகபயணி ஆகிச் சா வருகி்றது”

ஆயிடினும், ஊழிவரை

ஆண்டு என் வாழ்வு

அனுபவிக்கு மெனுமெண்ணம்

அடிக்கடி என் நடத்தைகளில்

தெரிகிறது, மனுசமனம்

தொல்லைகளைத் தோண்டித்

தோளாக்கிச் சுமைகனத்தும்

இருப்பென்றால்

இன்மை யென்றறிந்தும்

இருக்காமல்

ஓடுப்பட்டெங்கும்

உலைகிறது.

ஒரு கணத்தில்..

விடை பெறுதல் பற்றி

வீரர்கள் வரலாறு

உடைபட்டோடும் காலக்

காட்டாற்றில் அடிபட்டு

தடையங்களே இன்றித்

தாழும் வகை பற்றி


ஒளிப்படங்கள் போல் முன்னால்

ஓட..

இமைப்பொட்டில்

உண்மைத் தீ பற்றி

ஓங்கி எரிகிறது...


தி.திருக்குமரன்

நீயுமா கடலே...? ( சுனாமி நடந்த போது)ஒன்றுமே நடக்காதது போலவும்

ஏதுமே அறியாதவள் போலவும்

இப்போதைக்கான

உன்னுடைய பாவனைகள்

நீயா இவ்வளவும்

சப்பி மென்று துப்பி விட்டு

பேய்ப்பெயர் எடுத்துவிட்டு

பெரும் அமைதி காக்கின்றாய்

சுடச்சுடவே மீன் குழம்பு

ருசிப்பதற்கென்று நாங்கள்

சுடச்சுடவே கடலேறிப்

போகையிலும் நீதானே

அலைக்கரம் கொண்டெம்மை

அரவணைத்தாய் அக்கரமேன்

கொலைக்கரமாய் மாறிப்போயிற்று..?

நீ வந்து போன கரை

நெடுகிலும் பார் எல்லாமே

கழிவொயில் கொட்டியதாய்

கறுத்துப்போய்க் கிடக்கிறது

கரையோரத்தாவரங்கள் கூட

தாங்காமல்

எரிஞ்சது போல் கருகி

இறந்துளது என் செய்தாய்..?

வல்லரசுக் கழிவுகளை

வாரி இறைப்பதற்கு

எம் கரைதான் உனக்கு

இடமாச்சோ..? ஈழப்போர்

இருபத்தைந்தாண்டுகளாய்

கொடுத்த உயிர்த்தொகையை

இரு்பதே செக்கன்

இரைச்சலுக்குள் வென்றாயே..!

நானும் உள்ளேன்

நாவடக்கம் கொள்ளுக நீர்

என்றுரத்துரைத்திடவா

இப்படி நீ தலை விரித்தாய்..?

நீ இல்லாத

எம் வாழ்வுச் செழிப்பும்

நாமில்லாத

உன் வளங்களின் அர்த்தமும்

சாத்தியமற்றது தாயே..!

ஆதலால் உன் மீது மீண்டும்

ஊன்றி வலம் வருவோம்

ஆனாலும்

ஒன்றுதான் எனக்கு கவலை

வலியோர்கள்

உன் மீது திணித்த அணுச்சூட்டை

அப்படியே அவர் மீதே

கொட்டி அடக்காமல்

தடுமாறி,

உலக வழக்கொத்து

உன்னுடைய வீரியத்தை

மெலியோரில்

தவிச்சமுயல் அடித்துவிட்டாய்

போ தாயே..

வரவரத்தான் நீயுமிப்ப

மனுசரைப்போல்

மாறி விட்டாய்.


தி.திருக்குமரன்

3 Jan 2010


Thudipadhai vida
Unnai Ninaipadharkae
Neram seriyaka irrukirathu
En Idhayathirku…..

- Tabu Sankar

கவிஞர் அறிவுமதி நட்பு கவிதைகள்

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை

************

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....

**********

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

*************


2 Jan 2010

குற்றவுணர்வு


குற்றவுணர்வுகள் ஏதுமில்லை
சந்தோஷமாகவே இருக்கிறது
ஆனாலும்......!
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இருக்கின்றோம்
சந்தோஷமின்றி,
குற்றவுணர்வுகளுடன்.