26 Apr 2010

நீ மட்டுமல்ல.....











என்னிடமிருந்து
தூரமாகிப்போனது
நீ மட்டுமல்ல.....
உன் நினைவுகளும்
தான்...

ஊமையான அனாதை.......















உறவுகள் இல்லை-என்று
நான் இருந்த நாட்களில்-இங்கே
எனக்காய் ஏராளம் உறவுகள்.........
மகிழ்ச்சியாய் இருந்தேன் -இப்போது
இதுவும் பறிபோனது......
மீண்டும் நான் -ஒரு
அனாதை -ஆனால்
ஊமையான அனாதை.......
சொல்வதற்க்கு வார்த்தைகள்
இல்லை......
வலிக்கின்றது
மனம் மட்டுமில்லை-என்
கண்களும்தான்............

வலி வலியாகவே இருக்கிறது!












தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்
வலியென்னவோ
ஒன்றாகத் தானிருக்கிறது!
தன் நாக்கைத்
தானே கடித்துக் கொள்வது!
தன் விரலே
கண்ணைக் குத்துவது!
தானே சண்டையிட்டு
நண்பியை பிரிவது!
எல்லாவற்றிலும்
அளவீடுகளின்றி
வலி வலியாகவே இருக்கிறது!

23 Apr 2010

கவிதை













கவிதைகளுடன்
கதைத்துப் பார்க்கிறேன்
பேச மறுக்கின்றன...
நீ தான் வேண்டுமாம்...!
அடம்பிடிக்கின்ற
என் கவிதைகளுக்கு
எப்படிக்கற்றுக்கொடுக்கலாம்.
கதைப்பதற்கு...?

22 Apr 2010

காலக்கேடு...

Red Rose Pictures, Images and Photos


இதயம் போராட்டத்திற்கான
தீர்விற்காய் ஆயுதங்களை
கீழே வைத்த வேளை - உனது
காலக்கேடு எனது
சாபக்கேடுகளாகின...

என் மனதிலுள்ள உனது
உருவம் மறையும் வேளையில்
கடிகார வினாடிக்கம்பம்
போல் ஊசலாடுகிறது
என் ஆத்மா...

இந் நிலைக்கு கடிவாளமிடவே
உனக்கு கரம் கூப்பினேன்...
அதற்கும் இணங்காது
காலக்கேடு தான் விதித்தாய்..
கருணையும்..
காதலும்...
உன் மனதிலிருந்து
எவ்வளவு தூரம்...

என் செய்வேன்

FairyRed88 Pictures, Images and Photos


இறைவனால் எனக்காக
வழையப்பட்ட மடல்
எப்போது திருடப்பட்டது...?
என் கனவுகள்
ஒவ்வொன்றாக
கல்லெறிந்து கலைக்கப்படுகின்றதே..
என் எதிர்பார்ப்புக்களும்
இன்று என்னுள்
அந்நியப்படுகின்றதே..!
என் செய்வேன்
மனிதராக சொல்லிக்கொள்ளும்
சிலரால் தான் நான்
என்றுமே ஆக்கிரமிக்கப்படுகின்றேன்...

யாருக்கு தெரியும்....












நான் ...
மறைந்த பின்
என் உயிர் எழுதும்
என் கதையை...
யாருக்கு தெரியும்
பாசம் வைத்தவனே
என்னை பழி
தீர்ப்பான் என்று...

கல்லறை...

FlowerRosebudTopRedOpens Pictures, Images and Photos

FlowerRosebudTopRedOpens Pictures, Images and Photos

உணர்ந்திடு என்மனமே..

FlowerRosebudTopRedOpens Pictures, Images and Photos


















ஓ மனமே!
இறந்து போன வினாடிகள்
ஒவ்வொன்றும் ...
மரணத்தை நோக்கி
என்னை அழைத்து வந்ததை
நீ அறிவாயா..?
நீ பார்த்தும்
பார்க்காமலும் வைக்கும்
ஒவ்வொரு பாத அடிகளுக்குள்ளும்
என் மரணம் பதுங்கி இருப்பதை
நீ உணர்ந்து கொள்
என் மனமே...
உன் ஆசைகள் அடங்கினாலும்
அடங்காவிட்டாலும்....!
உனக்காக ஒதுக்கப்பட்ட
நேரம் வந்ததும் நீ
ஒரு நொடியேனும் முற்படுத்தவோ..
பிற்படுத்தவோ மாட்டாய்!
நீ விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் - மரணம்
உன்னை சுவைத்தே தீரும்..
உணர்ந்து கொள் என் மனமே..!

வாழ்வைத் தொலைத்தவள்...!

















அலைந்து அலைந்து
தொலைந்து போனேன்..
இன்று வாழத்தகுதி அற்றவள்
என்ற முத்திரையில்..?
இறைவா..
தீர்வு சொல்
எந்நாள்
இவளுக்கு
நிம்மதி
நிரந்தர நிம்மதி...!

21 Apr 2010

ஏன் மா(ற்)றினாய்...

















சத்தியங்கள் பல செய்து
பக்குவமாய் காய் நகர்த்தி..
காதல் நாடகம் நடத்தி..
ஒவ்வொரு வினாடியும்
என் மனப்பரப்பில்
உன் ஏக்கங்களை
விதைத்து...
சாமர்த்தியமாய் சம்மதம்
பெற்றாய்..
பல கோடி காலம் வாழலாம்
வா...! என பல தடவைகள் கூறி
காதல் பயின்றாய்...
என் இதய நாளங்களில்
காதல் சுவாசம் தந்து
என்னையும் உன் காதல்
மேகத்துக்குள்
மறைத்துக்கொண்டாயே...
ஏன்....?

இவள்...!














இவள் தவறாக
படிக்கப்பட்ட புத்தகம்
இல்லை இல்லை....
இறைவனால் தவறாக
அச்சிடப்பட்ட புத்தகம்

- சாரு-

ஞாபக வேலி

FlowerRosebudTopRedOpens Pictures, Images and Photos












இன்னும் இளமையாகவே
இருக்கிறது - நீ
வாழ்ந்து கொண்டிருக்கும்
உன்னைப்பற்றிய என் கவிதைகள்

அழகான இக் கவிதைகளுக்கு பின்
அழுது வழிந்து சிவந்த
இருவிழிகள் இருப்பது என்னைத்
தவிர்த்து இங்கு எவருக்குமே தெரியாது

காண்பவர் கண்களுக்கு இது
வெறும் கவிதை என்றாலும்
உன்னைப்பற்றிய வேதனைகளும்
வாழ்வைப்பற்றிய வெறுப்புக்களையும்
நான் தாண்டிக் கொள்வது
இந்த கவிதைகள் மூலம் தான்

உள்ளமாய் இருந்தவன்
உதறிவிட்டுப் போனான்
என்பதை.. ஊருக்குள்
சொல்லாமல்
மனதுக்குள் வைத்து
மௌனித்திருப்பது - உன்னை
மறந்தமைக்கான முடிவல்ல
முகங்கொடுக்கமுடியாத மனவேதனைக்கானது
என்பதால் தான்.!
ஓய்ந்து போன என் உயிர்
வாழ்தலில் எனக்கும்
ஓர் உற்சாகமிருக்கும் - மனமோ
இந்த மனிதர்களோ
உன்னைக் கேட்காத உலகில்
என்னால் உயிர்வாழ முடியுமென்றால்...!

ப்ரியமானவனே..!
என் சுதந்திரமான செயற்பாட்டிற்கு
வேலியாய் போன உன்
ஞாபகங்கள் நிறைந்த
இந்த நெஞ்சில்
மரணத்தை பற்றியும்
மறைத்துக் கொள்ள முடியாத
ஒரு பயம் பரவிக்கொண்டிருக்கிறது...

மரணித்து நான் மறுபடியும் பிறந்து
பிறந்ததுமே உன் பெயரைச் சொல்லி
அழுது விடுவேனோ என்று..

-சங்கர்

புரிதல்களின் தவறு வலியானதே .........













உனக்கும் எனக்குமான
உறவின் புரிதல்கள்.....
நீண்ட காலங்களென -நீ
நிச்சயமாய் மறுக்க முடியாதவை

எத்தனையோ மனிதர்களை
எதிர்கொண்ட என் வாழ்வில்
உனை மட்டும்
கணக்கிடத் தவறியதன்
காரணம் தேடுகின்றேன்....

உலகம் என் முதுகை
வியப்போடு தட்டுகிறது...
உனக்கும் இந் நிலையா??????

வார்த்தைகள் வரமறுக்க
தலையை மட்டும்
மௌனமாய் அசைக்க
தள்ளிவிட்டாய் என்னை !!!!!

மறந்திடு என்று
சுகமாய் விலகினாய்
நீ பகிர்ந்த காதல்இ.........
அத்தனையும் என்ன செய்ய????
பத்திரமாய் உடலோடு காவுகின்றேன்...
ஏனெனில்.................
உனக்கு திருப்பி அளித்திட...!!!!!
என் நெஞ்சத்துள்
நிறைத்து வைத்து
யாசித்த காலங்கள்.......
இதய இடுக்கைக்குள்
அடுக்கி வைத்த ஆசைகள்......
தூங்கும் இரவுகள் முழுதும்
தின்றுவாழும் உன் நினைவுகள்......
தூக்கத்தையே தொலைத்த
சாமங்கள்.....எனக்குள்
பத்திரப் படுத்திய
உன்காகிதகிறுக்கல்கள்....அதை
அடிக்கடி புரட்டிப் பார்த்த
நிமிடங்கள்............
சாவின்விளிம்பைத் தொடுகையில்
உன்னை நினைத்தே
தப்பித்தபொழுதுகள்.....
பேசிபேசியேவாழ்ந்தபோதும்
கிடைக்கும் அரிய வாய்ப்புகளில்
உனை பத்துமாதம்சுமந்தவளை
தவிர்த்துஉரையாடிய நேரங்கள்...
இப்படி இப்படி எத்தனையோ...
அத்தனையும் புரட்டுகையில்
இழந்து போன காலத்தை
எண்ணி எண்ணி வெம்புகின்றேன்...
நீ அனுப்பிய
நினைவுப் பரிசுகள்....
பிரியங்கள் பகிர்ந்த
மடல்கள்...-உன்

நிழற்படங்களைத் தாங்கிய
ஏடுகள்.........
சேகரித்து வைத்த
என் கரங்கள்....
எனை அறியாமலே
விறு விறுக்கின்றன !!!!!

எரிக்க எடுத்த
தீக்குச்சியின் பெருஞ்சீற்றம்
வழமைக்கு மாறாய்......
எரிவின் வெட்பத்தால்
பிரபஞ்சமே பொசுங்கி விடுவதாய்
வெஞ்சினத்தோடு எரிந்தன....
உன் நிராகரிப்பிற்கான
காரணம் மட்டும்
இன்று வரை புரியவில்லை
இதற்கான மறுதாக்கம்
ஓர் நாள்.......
வாழ்க்கை வலிக்கையில்
நீயாகவே புரிந்து கொள்வாய் ...!

துண்டித்து விட்டேன் உன்னுடைய தொடர்பை

















உன்னுடைய தொடர்பை
துண்டித்து விட்டேன்
துடித்தது என் இதயம்
துயரம் தாங்காமல்
விடியுமா நம் வாழ்வு
இப்படியே தொடர்ந்தால்...?
இதயத்தை கல்லாக்கவில்லை
மாறாக .. அது இன்று
இரத்த கண்ணீரை
உள்ளே வடிக்கிறது
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
இந்நிலை நீடித்தால்
நீ தாங்கமாட்டாய்
உனக்காக தான் நான்
உணர்வுகளுக்கு திரையிட்டு
உடனே துண்டிகிறேன்
ஊமையாய் செல்கிறேன்
மன்னித்துவிடு...

தவிக்கிறது மனம்












உன்னை நான் நேசித்த போது

அழகாகத் தான் தெரிந்தது அனைத்தும்
என் மனதை இதமாகத் திறந்தது
உன் கடைக் கண் பார்வையா?
புரிந்தது.....
வாழ்வின் அர்த்தங்கள்

புத்தம் புது மலராய் மலர்ந்த
பூ நீ...!
கல்லாயிருந்த என் இதயம்
முதன்முதலாய் தோற்றது
உன்னிடம் தான்!

என் இதயத்தில்
இடம் பிடித்தாய் நீ
ஆனால் பல வேளைகளில்
உனது வார்த்தைகளால்
காயம் கண்டது
என் இதயம் ...
அப்போது தான் அறிந்தேன்
நான் வலிகளின்
வேதனைகளை

மன்னிப்பதற்கு மனமிருந்தும்
ஏற்பதாக என் மனம் இல்லை
தவிக்கிறது மனம்
காரணம் கூற இயலாது ....

எனக்காக நீயும் உனக்காக நானும்
என்று கனவு தான் கண்டேனோ?
நானறியேன் ..
உறவுகள் பல இருந்தும்
தனிமையில் இருப்பதை
உணர்ந்தேன் நான்
வாழ்ந்த நாளெல்லாம் போதுமென
புயலில் சிக்கிய பூ போன்றது
என் கதை ...

நித்தமும் நான் உன்
நினைவோடு வாழ்கிறேன்
நிழலாக..............


-பாரதி

காலம்…!
















கால வெள்ளத்தில்
தினம் தினம் உனை
காண முடியாமல் போகலாம்…
உள்ளத்து உணர்வை
உறைக்க முடியாமல் போகலாம்…
அழத்தோன்றுகையில்
உனை அன்றி உன் நினைவுகளே
ஆறுதலாய் ஆகலாம்…
அன்பை வெளிக்காட்ட
உனை நினைத்த நேரத்தில்
அழைக்க முடியாமல் போகலாம்…!
ஆனால், எனக்குள் என்றென்றும்
உயிர்ப்புடன் உறங்கிக்கொண்டிருப்பாய்
நீ…!


கவிஞர்:கவிதை

பிரிவு...?


















வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!

ம்...!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்...?

இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு...?

ஓ...!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்...

பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!

ம்... சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல!

-சத்தியா

புரியாத புதிர்தான்!















பல நாளாய்
எழுதுகிறேன்தான்!

ஆனால்
நானொன்றும்
எழுத்தாளன் கிடையாது!

இங்கு
எழுதி எழுதி
எதையும் சாதிக்கும் எண்ணம்
எப்போதும் எனக்கில்லை!

ம்...!
சத்தமின்றி யுத்தம் செய்யும்
என் மனது
எதை எதையோ
சொல்லிவிடத் துடிக்கிறது!

கேட்பதற்கு யாருள்ளார்…?
என்ற
கேள்விக் குறி இங்கே!

என் மனது
சொல்லத் துடிப்பவற்றை
என் விரல்கள்
எழுதி முடிக்கிறது!

சத்தம் போட்டு
யுத்தம் செய்ய
சத்தியமாய் விருப்பமில்லை!

ஆகவே…
சத்தங்கள் எதுவுமின்றி
இங்கு நிசப்தமாய்!

ஓ...!
உன்னை
புரிந்து கொள்ள முடியவில்லை
புரியாத புதிர் என்றாய்!

ம்…!
புரியாத புதிர்தான்!

ஒன்று சொல்லட்டுமா…?

பெற்றவர் கூட
இற்றைவரை எனை புரிந்ததில்லை!

ஓ...!
இன்னுமொன்று சொல்லட்டுமா…?

கூடப் பிறந்து
ஓடித் திரிந்து
ஒற்றுமையாய் இருந்து
ஒரு தட்டில் உண்டு
ஒன்றாய் உறங்கிய
என் உடன் பிறப்புகள் கூட
ஒருவரும் புரிந்ததில்லை!

நீ
எங்கே இருந்து
எப்படிப் புரிவாய்…?

ம்…!
நீ
என் அகத்தை
எப்படிப் புரிவாய்…?

புரியாத புதிராய்
புரியாமலே இருக்கட்டும்!
இனியும்
புரிந்து கொள்ளத் துடிக்காதே!

ம்…!
இன்று போலவே
என்றும் - நீ
வாசகனாய் இருந்து விடு!


-சத்தியா

களங்கம்..!



Life Pictures, Images and Photos

என் பிரியமானவனே
வாழ்க்கை என்னும்
வற்றாத நதியில் - நான்
வசந்த காலத்தை நோக்கி
எதிர்நீச்சல் போட்டபோது...
புயலாய் தாக்கியது
உன் காதல்...! என்
எதிர்காலத்தை மட்டுமல்ல
எனது எண்ணங்களையும்
சேர்த்து சிதைத்தாய்..
இன்று களங்கம் எனும்
பரிசு பெற்று காத்திருக்கிறேன்..
இதுவும் கடந்து போகும் என்ற
நம்பிக்கையில்...

நினைவு










எத்தனை தடவைகள்..!
கடிகார முட்களை விட
நாட்கணக்கில்
உன் நினைவுகள்
என்னுள்......

18 Apr 2010

மௌனம்










என் இதயத்தைக்
கீறிப்பாக்காதே...
ஆயுதத்தைவிட
கொடுமையானது
நீ என் மீது வீசும்
சொற்கள்(கற்கள்)....

காதல் தேர்தல்..












தெளிவாய் தெரிகிறது
நம் காதல் தேர்தலுக்கு
பெற்றோர்
வாக்களிக்க மாட்டார்கள்
புறக்கணிப்புச் செய்வார்கள்..

நிறைவேற்று அதிகாரத்துடன்
நீயும் நானும்
இயங்குவது தவிர
இங்கு வேறு வழியேது

உதிரிக்கட்சிகள் போல்
ஊரார் சிலர் எம்மோடு
கூட்டுச்சேர்ந்தாலும்
வலுமிக்க எதிர்க்கட்சிகளாய்..
நிலைத்திருக்கின்றனர் நம் பெற்றோர்.
காலமின்னும் கடந்தால்
செல்லாத வாக்கு போல்
சென்றுவிடும் நம் நிலமை..

எத்தனை வாக்குறுதியை
நானளித்த போதும்
ஏற்கிறார்கள் இல்லை.

காணாமல் போனது
காதல் ஜனநாயகம்
கண்டிப்பு எனும் சாட்டில்
பெற்றோரின் சர்வதிகாரம்..

எம் காதலை
எத்தனை கீழ்தரமாய்
பிரச்சாரம் செய்கின்றனர்
உன் மாமன்

நாம் செய்திட்ட இரகசிய
சந்திப்புக்கள்
நமக்கு எதிராய்
நாமே ஒட்டும் சுவரொட்டிகளாய்
ஆகிற்றே..

கடித பரிமாற்றத்தை
கச்சிதமாக செய்து தந்த
உன் பாசத் தம்பி
கட்சி மாறி
காட்;டி கொடுத்து விட்;டானே

எம்மை எதிர்ப்போரை
நிராகரிக்கப்பட்ட
வாக்குகளாக்கி
நிச்சயம் வெல்வோம்
இது
அடிக்கடி இடம்பெறும்
ஆட்சிக்கான தேர்தல்
அல்ல..
ஆயுளின் ஒருமுறையே வரும்
காதல் தேர்தல்...


யோ. புரட்சி

9 Apr 2010

இறைவன் தவறா..?

fantasy girl Pictures, Images and Photos

என்ன செய்ய ....
வாழ்க்கை வட்டத்தினுள் இருந்து
வெளியே வந்து சிந்தித்தாலும்....
மீண்டும் அடைபடும் நிலை...
வெகுதூரம் பறந்து செல்ல நினைக்கிறேன்.
இந்த போலியான உறவுகள்
போலியான மனிதர்களை விட்டு
வாழ்க்கை என்பதே தங்குமிடம் தானே
அதற்குள் எத்தனை தங்குமிடங்கள்..
யார் தான்....
இப்படி நடக்கும் என்று நினைத்தார்கள்...
படைக்கும் போதே........
இறைவனுக்கு தெரிந்திருந்தால் ...
இறைவன் இப்படிச் செய்திருக்க மாட்டான்..
இறைவனுக்கே...!
இன்று இவள் ஏமாறுவாள் என்று
அன்று தெரிந்திருக்கவில்லை போல்...