29 Oct 2010

கலைந்து போனது...

அன்று 
கருவோடு.... - என்
காதல் கலைந்து போனது.. 
இன்று 
உயிரோடு கலந்து
உறைந்து போகின்றதே..
என்...,
காதலை சுமக்க -  நான் 
என்ன தாய்மை அற்றவளா..?
இல்லை தகுதி அற்றவளா..?


by:- ShaRu

27 Oct 2010

என்னை ஆசீர்வதி....


நான் 
எரிமலையிலிருந்து தான் 
தோன்றியிருக்க  வேண்டும் 
ஆம்... ! அப்படித்தான் இருக்கும்..
இல்லையேல்..?
எனக்குள் இருக்கும் நெருப்பு 
எப்படி வந்தது..?
யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்..
எனை எவரும் வேரோடு 
பிடுங்கி எறிய அனுமதியாமலும்...
நான் செய்யும் 
போரின் வேர் உன்னுடையது தானே..! 
உரிமைப்போரில் 
உன் காதல் தோற்றுப்போகாதிருக்க ..
எந்த வேளையிலும் 
உன்னை இழக்காமலிருக்க ..
என்னை ஆசீர்வதி..

நீ ..!


நீ ..! 
உன் நினைவுகள் ..!
என்னை மட்டுமல்ல
என்னை சுற்றி இருப்பவர்களையும் 
சிதைத்துக்கொண்டிருக்கிறது.
by : Sharu


என்னுள் நீ... தீயாக ..


ஆடலும் பாடலும் 
வெளியில் மட்டுமே 
என்னுள் நீ... தீயாக 
 கனன்று கொண்டு இருக்கின்றாய்..
சுற்றி இருப்பவர்களை
 சுட்டெரிக்கும் ..,
அபாயம் உள்ளதால் தான்.. 
விலத்தி வைக்கிறேன் 
ஒவ்வொரு உறவாக 
இன்று.......!


by : sHaRu..

21 Oct 2010

தோல்வியின் வலி...


என் தோல்வியின்  
வலி எனக்கு மட்டுமே 
சொந்தமானது .. 
அதை.
 உன்னிடம் தெரிவிக்க - என் 
மனதிற்கு இஸ்டமில்லை...  
ஏனெனில் ..
வலியின் வலியை 
வலிமையாக
 புரிந்தவள் இவள்....! 


by : - ShaRu

5 Oct 2010

கடைசி மழைத்துளி..

Aono Pictures, Images and Photos

கடைசி மழைத்துளியும்
 நீ 
கைகள் ஏந்தி 
ரசிக்கும் வரை 
தெரியவில்லை.. 
மழைத்துளியில் - உன் 
கண்ணீர்த் துளியும் 
கலந்து இருப்பதை..
முடிந்தது என்பது
 இறந்து போனது..
அதை ....
தினமும்........
புதிதாக்கிப் பார்க்கிறாய், 
உனக்கு ....,
இஸ்டம் இல்லாமலேயே!!!

by : - MiRun

4 Oct 2010

உனக்காகவேஎன்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்
உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்
*
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது
உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர
*
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்
ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது
*
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக
*
என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்
உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை

 
by :- -யாழ்_அகத்தியன்

3 Oct 2010

இவள்..

sad_girl Pictures, Images and Photos


இவள்
வாழ்வில்
சந்தேகம்
தீயாக எரிந்து
கொண்டிருக்கையில்
சந்தர்ப்பங்கள்
எண்ணையாக
அல்லவா.........,
ஊற்றப்படுகின்றன..

ஓர் ஒளியாய் ...

மணிக்கணக்காக 
இருந்து......
முயற்சி செய்தும் 
உன்னை மறக்கமுடியவில்லை.. 
எனக்குள்
உன் நினைவுகள் 
ஆழமாக பதிந்து விட்டன..
உன் பார்வை 
என் இதயத்துள் 
ஓர் ஒளியாய்....
தற்போதும் 
சுட்டெரித்துக்கொண்டிருக்கின்றது..


by :- viswa

நீ...

sad.gif Pictures, Images and Photos

நீ எனக்கு செய்த 
எந்த தீமையாயிருந்தாலும் 
அதெல்லாம்..
என்மனம் ஏற்று தாங்கியது..
ஆனால்..,
நீ என்னை சந்தேகப்படுவது தான் 
ஏற்றுக்கொள்ள முடியாத
ஒன்றாகி விட்டது.. 


by :- viswa

மனசாட்சி...
மரணித்தவன் மரணதேவன்
மனித வாழ்வில்
முகவரி
எழுத முன்னரே..
முடிவுரை எழுதி
முத்திரையிடப்பட்டு
மண்ணில் மூடி
வைக்கப்படுகின்றது.
மனித உடல்..!
எத்தனை எத்தனை
இளம் கவிதைகள் - அத்தனையும்
அநியாயமாக அபகரிக்கப்பட்டு
மண்ணிற்குள் நல்லடக்கம்.
இதனை நினைத்திடும்
பொழுதெல்லாம்
என் நெஞ்சத்துள்
எப்போதும் நில நடுக்கம்
என் ப்ரியமானவனே..
நிரந்தரமான நித்திரையில்
நீயிருக்க
ஓய்வின்றி ஓசையிடும்
கடல்அலையாக
மனதில் ஆர்ப்பரிக்கும்
ஆத்திரத்துடன்
அழுகையையும் அடக்கிவைத்து..
புறம் தனில் புன்னகை பூத்த
முகத்தோடு - நான்
நடிக்கின்ற ஒவ்வொரு
நிமிடமும்.....
உலக சாதனைக்குரியது தான்.


by :- viswa

நடைப்பிணமாக..


என் உயிரை
உனக்கு தந்து விட்டு
நான்....
நடைப்பிணமாக  தானே
அலைந்தேன்.. - நீ
என் உயிரைக் கொண்டு
ஓடிவிட்டாயா..- இல்லை
தொலைந்து விட்டயா...?

by:- viswa

விலாசம் இழக்கிறது..

என் 
விழியின் பார்வை 
விலாசம் இழக்கிறது...
உடலுக்குள் இருக்கும் 
உயிர் மழை 
சொட்டுச்சொட்டாய்
ஒழுகி வடிந்து கொண்டிருக்கிறதே.நீயே தான்...

Sad Girl Pictures, Images and Photos


என்னை விட்டு 
பிரிந்து சென்றது
 நீ தானே தவிர 
என் காதல் அல்ல.... 
என் இதயத்திலிருந்த
தாஜ்மகாலிலிருந்து 
அகன்றது..!
நீயே தான் தவிர 
என் தாஜ்மகால் அல்ல..

நீ மட்டுமல்ல.

Sad Pictures, Images and Photos

விலகிச்செல்வது
நீ மட்டுமல்ல..
உன்னோடு சேர்த்து
என் எதிர்காலமும் தான்.