14 May 2010

"மனநோயாளி"நீதான்
உலகமென்ற நினைப்பில்
இத்தனை வருடங்கள்!
எனது
அசைவுகள் எல்லாமே
உன்னோடு மனம் கோர்த்து
உன்னையே மையப் படுத்தி..!

உனது கை கோர்ப்பு
நட்புடனா!
அல்லது நடிப்புடனா!
எனக்குத் தெரியவில்லை.

திடீரென நீயென்
கைகளை உதறி விட்டு
விசுக் விசுக்கென
உன் கை வீசி
நடக்கத் தொடங்கியதும்...
மனவெளிகளின்
தனிமை தாங்காது
புடைத்த மூளைநரம்புகளின்
வலியோடு... நான்

அவை
வெடித்துச் சிதறி...
"மனநோயாளி" என்ற முத்திரை
என் மேல் குத்தப் படுமுன்
ஒரு வார்த்தை சொல்லிவிடு
நட்புடனா..?
நடிப்புடனா..?

தொலைக்காதே உன்னை ......


யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை

சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்

சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்

இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்

பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு

யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே

திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்

தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை

தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...

10 May 2010

நீயாக ...
என் மனப்பாடம்
செய்யும் பகுதி
நீயாக ...இருப்பதால்
தானோ என்னவோ..
நான் மனப்பாடம் செய்யும்
பாடம் கூட
என்னுள் இருப்பதில்லை..

தொலைந்தது....
நீ என்னில் இருந்த இடம்
இன்று வெற்றிடமாய்...
தொலைந்தது என் கனவுகள் மட்டுமே....
நினைவுகள் அல்ல... அவை
இன்னும் உயிரோடு உறவாடி
கொண்டு தான் இருக்கிறது...
நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள்
இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்....
காரணமற்ற பிரிவு
காதலுக்கு மட்டும்
எப்படித்தான் வந்து தொலைக்கிறதோ..?

உன் பிறந்தநாளன்று...


உன் பிறந்தநாளன்று
முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென
சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில்
வாழ்த்துவதற்காய்
நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?

8 May 2010

தவறு நான் செய்யவில்லை


இறந்து நான் போன பின்
என் இதயத்தை அறுத்துப்பார்
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும்...
என் கதை
அப்போதாவது யோசி
தவறு நான் செய்யவில்லை
இருந்தும்
தண்டனையை நீ தருகின்றாய்
என்று.....

விழிகள் சிந்தியன பனித்துளிகளை

கண்கள் செய்த சிறு தவறுக்காக
ஆயுள் முழுவதும் என்னை
ஆயுள் கைதியாக்கி விட்டாய்
உன் இதயத்தில்

நம் நட்பு…


ஒரு உலகப்போருக்குப் பின்
நமக்குள் ஒரு ஒப்பந்தம் வரும் என்று
நான்
நினைக்கவில்லை.

விளையாட்டாக ஆரம்பித்த நாம்
ஒரு பொழுதில்
இந்தியா
பாகிஸ்தானாக
வார்த்தை ஏவுகணைகளை வீசிக்கொண்டோம்.
உன் கூழாங்கற்கல்
வார்த்தைகளிலொன்று
என் மனக்குளத்தில் சலனத்தை மட்டுமல்ல
சங்கடத்தையும்
தந்தபோது…
கோபத்தை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு
ஏசுவின் சீடனாய் என்
மறு கன்னத்தையும் தந்தேன்.
அதில்தான்
உன் இரும்பு மனதும் கொஞ்சம் இளக
ஆரம்பித்தது….

யதார்த்தமாய்த்தான் ஆரம்பித்தது
அன்றைய
சந்திப்பு;
அர்த்தமுள்ள ஒரு நட்புக்கு
விதை தூவும் என்று
எண்ணியிருக்கவில்லை.

நட்புக்கு மேலாகவும்
காதலுக்கு கீழாகவும்
நலினமாய்…
நாகரீகமாய்… ஒடும்
ஒரு நயாக்ரா நதி நம் நட்பு…

இயந்திரங்களுக்கு
இதயம் இல்லை என்று
யார் சொன்னது தோழி...???
கம்ப்பியூட்டர்
கண்ணாடியில் மின்னும்
பாசத்தில் தோய்ந்த உன்
வார்த்தைகளை பார்த்த
பின்பும்
எப்படிச் சொல்வது…
இயந்திரங்களுக்கு இதயம் இல்லை
என்று……..!!!!!!

நீ அன்று குழந்தையாய் கேட்டாயா இல்லை
குறும்பாகக்
கேட்டாயா;இல்லை
குழப்பத்தில் கேட்டாயா????
நம் நட்பின் முடிவு
எதுவென்று…????
எப்படிச் சொல்வது;
அநேகமாய்
உன் வருங்காலக்
கணவனின் கையில்தான்
நம் நட்பின் ஆயுள் ரேகை ஒடிக்கொண்டிருக்கும்…

நைல்
நதியாய் நம் நட்பு நீள்வதும்;இல்லை
நத்தையாய் சுருண்டு கொள்வதும்;
அவர்
சுட்டுவிரல்தான் சுட்டிக்காட்ட வேண்டும்…

கவலைப் படாதே தோழி….
காலம்
கருணையுடையது…
இருக்கும் வரை
சிரித்துக்கொள்ள சில
சந்தர்ப்பங்களை
பரிசளிக்காதா… ?

இருதியில்
பிரிவில்தான் நமது
பிரியாவிடையென்றால்
கண்ணை விட்டு கலையும் கனவாய்;
பூவை விட்டு விழும்
இதழாய்;
உன்னை விட்டு
நோகாமல் நகர்ந்து கொள்கிறேன்…
நாம்
சேமித்துவைத்த சந்தோஷங்களை மட்டும்
நெஞ்சில் சுமந்து கொண்டே…

இறுதி அத்தியாயம்.....

ரம்மியமான காலை நேரம்,
ஊரோ கலகலத்த வண்ணம்.....
வீடோ சோகத்தில்...!!

பெற்றோர் என்னருகில்...
உடன் பிறந்தோர் என் அருகில்...
நண்பர்களும் என்னருகில்.....!!

என் மனதில் ஓடிய படம் என்ன...??
யோசித்தேன்... பலமுறை...
தெரிந்து கொண்டேன் காரணத்தை....!!

ஓஒஹ் ...!! நான் உயிரற்ற
வெற்றுடம்பாய்,
வெள்ளை துணியின் கீழ்.....!!

தேடினேன் அவனை
காணமுடியவில்லை.....
அவ
ன் தான் என் காதலன்....!!

எனை மறந்தேன்.... அவ
னை
மறக்க முயன்றேன்....
முடியவில்லை.....!!!
ஒரு வார்த்தை என்னுள்
மீண்டு கொண்டிருந்தது....

அது என்ன வார்த்தை....??
யோசிக்க நினைத்தேன்
அதற்குள் எரிக்கப்படுவதை
உணர்ந்தேன்.... இது என்
இறுதி அத்தியாயம் ........!!!

உயிர்த்தெழுகிறது...
நிகழ்காலம்
நெருப்பானதால்
இறந்தகாலம்
உயிர்த்தெழுகிறது...

7 May 2010

ஆயுளின் அந்தி வரை


நம் கவிதைகளை
வானத்திற்குக்
காண்பித்தேன்

வானவில் கொடுத்து
மழை தூவிவிட்டது

மனிதர்களிடம்
காண்பித்தேன்

கண்களை
மூடிக்கொண்டு
எச்சில் துப்பிவிட்டார்கள்

-அறிவுமதி

காதல்!


நீயின்றி நானில்லை
என்பதல்ல காதல்…
எது இல்லையென்றாலும்
நான் இருக்கிறேன்
என்பதுதான் காதல்!

யாரிடம் சொல்லுவது.....நிழலாக சேர்ந்து இருந்தாய் ,
ஆனால் நிழல் கூட இப்போது இல்லை
என் வலிகளை சொல்ல கூட
வார்த்தைகள் தெரியவில்லை
என் வலிகளை யாரிடம்
சொல்லுவது.....


6 May 2010

பிரிவுகளே.....


சட்டென்று முடிவடையும்
ஒற்றையடிப்பாதையின்
குறுக்குச் சுவர்
மரணங்கள் !
தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.

சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை
பார்த்தாயா....?


இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.


ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.

இது தான் காதலா..?உன்னைப் பிரியும் வேளையில்
ஏதோ ஒரு உணர்வு - என்
விழிகளுக்குள் நீர் நிரப்பி செல்கின்றதே...
முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

யார் கேட்டும் மறுக்கும்
என் இதயத்தை நீ கேட்க
நினைக்கும் போதே
கொடுக்க தோன்றுகிறதே
இது தான் காதலா..?3 May 2010

தயக்கம் தண்டனைக்குரியது..உண்டென்றால் உண்டென்பேன்..
இல்லையென்றால் இல்லை என்பேன்..
காதலில் தயக்கம் தண்டனைக்குரியது..
காலப்பெருங்கடலில் நழுவி விழும்
கணங்களை மீண்டும்
சேகரிக்க முடியுமா உன்னால்
வினாடி கூட விரயமாதல்
கூடாது....
இப்போதும் கூட
தேசத்துரோகம் என்பதை
ஒப்புக்கொள்ளாத
தீவிரவாதி மாதிரி
உன் உள்ளிருக்கும்
காதலை ஒளிக்கவே
பார்க்கிறாய்..

2 May 2010

உன் வரவால்உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது..
நீ பிரிந்தவேளை அதிர்வில்
என் உலகம் நடுங்கியது..
பிரிவைத் தயாரித்துக்கொண்டு தானே
காதலையே அறிவித்தாய்....?
நீ வந்து போன அடையாளமாய்
என் வீட்டில் உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்கிறது...
உன் வரவால் - என் உயிரில்
கொஞ்சம் செலவழிந்து விட்டது...
இந்த உறவின் மிசசம்
சொல்லக்கூடாத சில நினைவுகளும்..
சொல்லக்கூடிய ஒரு கவிதையும் தான்...

நம் நினைவுகள்...?காலத்தின்
கட்டாயத்தில்
நம் கனவுகள்
கலைக்கப்படலாம்..
நம் நினைவுகள்...?

நம் சமூகம்..!

விடைதெரியாத

வினாக்களாக
நாம்...

விடைதெரிந்தும் ...

விதவைகள்
ஆக்கப்பட்டு
நம் சமூகம்..!

நாம் தமிழர்..தேர்தலின் போதும்
நம்மைத் தேடுவர்
தேடுதலின் போதும்
நம்மைத் தேடுவர்
தேவைப்படின்
காகிதத்தில் நாம்
குத்துவோம்..
தேவைப்படேல்
காகிதம் நம்மைக் குத்தும்...
ஏனெனில் நாம் தமிழர்.