29 Jun 2010

இன்று.....


நான்

நேசித்த இதயத்தில்

இன்று.....

என்னையோசிக்க

வைத்த இதயம் - நீ

20 Jun 2010

தயங்கினேன்...


விலகி போவாயோ

என்று பயந்தே

காதலை சொல்ல

தயங்கினேன்...

காதலை சொல்ல

தயங்கியதாலே..

நீ விலகி

போவாய் என்று

தெரியாது...

எதுக்கு ...!


தாய் இல்லாமல்

பாசம் எதுக்கு

வலிகள் இல்லாமல்

சாதனை எதுக்கு

கண் இல்லாமல்

கண்ணீர் எதுக்கு ...

இரவில்லாமல்

பகல் எதுக்கு

காற்று இல்லாமல்

உயிர் எதுக்கு

சூரியன் இல்லாமல்

நிலா எதுக்கு

கண் இல்லாமல்

கண்ணீர் எதுக்கு

சோகம் இல்லாமல்

சோதனை எதுக்கு

இதை எல்லாம்

உருவாக்கியவனை

மறந்த வாழ்கை எதுக்கு ...!

ஏனோ... ?


கதறி அழும் குழந்தை,

பாத்திரம் நிறைய

பால் இருந்தும்...

குடிக்க வைக்க

பால்புட்டி இல்லை,

பதறி துடிக்கும்

என் நெஞ்சு

ஆயுள் முழுதும்

காதலிக்க நீ இருந்தும்

ஏனோ... ?

குழந்தை மனசு...


சிரித்தால் சிரிக்க தோன்றும்

கோபப்பட்டாலும்

சிரிக்க தோன்றும்

மிரட்டினாலும்

சிரிக்க தோன்றும்...

அழும் போதும்

சிரிக்க தோன்றும்

விட்டு சென்றால் மட்டுமே

அழ தோன்றும்

குழந்தை மனசு.

இவை அனைத்தும்

என் காதலிலும் உணரப்பட்டது..

தெரியவில்லை...


அணுவணுவாய்

ரசிக்கிறேன்..

அனுதினம் சாகிறேன்..

அணுவை பிளக்கும்

சக்தி இருந்தும்....

அவள் இதயத்தை பிளக்க

தெரியவில்லை..

16 Jun 2010

இதுவரை...,

காதல் தோல்வியின்

சின்னம்"தாஜ்மஹால்"

வெற்றியின் சின்னம்

இதுவரை இல்லை!!

ஜெய்த்தவன் காதலை

மதிப்பதில்லை..

தோற்றவன் காதலை

மறப்பதில்லை...

இதுதான் "காதல்"


முதல் காதலை அடைய

முயற்சிக்கும் போது

அதற்குரிய தகுதி

நம்மிடம் இருப்பதில்லை.....

எல்லா தகுதிகளையும்

அடைந்து விட்ட பிறகு

முதல் காதல்

நமக்கு கிடைப்பதில்லை......

இதுதான் "காதல்"

10 Jun 2010

படிக்க முடியாத பக்கங்கள்..!


நான் போக நினைத்தது

எங்கே ..!

இப்போது வந்து நிற்பது

தான் எங்கே..!

பாதையை என்

பாதங்கள் தீர்மானிக்கவில்லை..

காலம் தான் ..!

புன்னகை கிடைத்தது

இதழ்கள் பறிக்கப்பட்டது...

வெளிச்சம் கிடைத்தது..

விழிகள் அணைக்கப்பட்டது..

இன்று கிடைத்தது

நேற்று பறிபோய்விட்டது..

இவை என்னுள்

படிக்க முடியாத பக்கங்கள்..!

9 Jun 2010

எனக்கு..,


உன்னை..
என் இதயம் என்று
சொல்ல மாட்டேன்..
ஏனெனில்..!
உன்னை..
துடிக்க வைத்து
உயிர் வாழ்வதில்
எனக்கு..,
உடன்பாடில்லை..

உன் எதிரில்...


மனசுக்குள்

எழும்பும் அலைகள்

உதடு என்னும்

கரை வந்து சேரவில்லை...

உனக்காக....

கோர்த்தெடுத்த

வார்த்தைகள் ....

உன் எதிரில்

ஏன் வரவில்லை...

By:ViSwa

8 Jun 2010

தொலைந்து போன....


இரு கரையுமில்லா
நதியை போன்று...
விழுந்து

கொண்டிருக்கிறேன்
நான்...

கலந்து இளைப்பாறிட
வரும் கடல் அது..!
காற்றே....
உனக்குமா தெரியாது - என்
தொலைந்து போன
காலம் எங்கே
என்று...!


by: SharU

தெரிந்தும்.....


உனக்கே தெரியாமல்

நான்...

உன்னை காதலித்ததும்

நீ

என்னை காதலித்தது

தெரிந்தும்.....

தெரியப்படுத்தாது

இருந்ததில்..!

உள்ள சுகம்

எனக்கு...

எனக்கு மட்டுமே
தான் தெரியும்!

7 Jun 2010

உன் நினைவுகளோடு...


"உன்னோடு
பயணிக்க எத்தணித்த
கால்கள்..
இன்று
பயணிக்கின்றன..
உன்னோடு அல்ல
உன்......
நினைவுகளோடு..!"

6 Jun 2010

நான்...,


கனவுகளுடன் பிறந்தவள்

காயங்களுடன் வாழ்பவள்!

கற்பனைகளில் ஆறுதலடைந்தவள்

கலைந்ததும் தேறுதலாளவள்..!

அன்பை தேடியவள் - அதனால்,

தொலைந்து போனவள்..!

மழலையில் மகிழ்ந்தவள்

மங்கையானதும் மௌனித்தவள்!

ஆசைகளை விரட்டியவள்

நிராசைகளை வரவேற்றவள்..!

இயற்கைக்கு நிகரானவள்..

செயற்கைக்கு திரையானவள்!

வாழ்வில் பொலிவிழந்தவள்..!

காதலை நேசித்தவள்..

கவிதைகளை யாசித்தவள்!
கலகலப்பிற்கு ப்ரியப்பட்டவள்

அதனால்,

தனிமைக்குள் புகுந்தவள்..!

பிறர் மனதை மதித்தவள்

அதனால் ...,

மிதிக்கப்பட்டவள்!

நான்....

பிரகாசித்ததும்...

பின்னடைவோடு இருப்பவள்!

என் நன்றிகள் உனக்கு...!


என் உயிருக்கு
அமில உரமிட்டவன்
நீ...! எப்படி
எனை வீழ்த்துவது
என்று என்
நிழலாக தொடர்ந்தவன்
நீ...
ந்ல்லதொரு தோழனாய்
நடித்து பெரும்
நட்பு துரோகியானவன்
நீ...! தடையாகி எனை
தடுக்கி விழச்செய்தவன்
நீ.. என்னைப்
பழித்திட என்னுள்
இலட்சிய விதைகளை
திமிரோடு விதைத்தவன்
நீ..! என் முயற்சிகளுக்கு
முட்டுக்கட்டைகளை
வீசியவன் நீ..!
ஆயிரம் தீங்கிளைத்தாளும்
என்னை நான்
உணந்திட காரணமானவன்
நீ..!
ஆகையால் ...
ஜென்மம் அடுத்திருந்தால்
சந்திப்போம்....
சிறந்த விரோதியாக..
5 Jun 2010

என் நினைவுச் சின்னம்...நான் ..!
விடைபெற்று
கொண்டு விட்ட
செய்தி.....
உன்னை வந்து
எட்டியதும்
நண்பா..
பதறாதே..
ஒரு இலை
உதிர்ந்ததற்கு மேல்
இதில் எதுவும்
இல்லை...

இந்த உலகம்


மனம் என்பது கனமானது தான்..!

ஏனென்றால் காலத்தின்

ஓட்டப்பந்தயத்தில் அதைக்

கழற்றி வைத்தவர்கள் ...

வேகமாக முன்னேறி விரைந்து

கொண்டிருக்கிறார்கள் .. ஆனால்

உண்மையானவராய் வாழ்வபவர்களுக்கு

அடிக்கடி இந்த உலகம்

அபராதம் போடுகிறது...

பரவாயில்லை...

பொய்யின் தோள்களில் ஏறி

பூமியை சுற்றுவதைவிட..

உண்மையின் கைகளைப்

பிடித்துக்கொண்டு

உட்கார்ந்திருப்பது கூட

உத்தமமானது தான்.

4 Jun 2010

உள்ளிருப்பது....


புதையலைத் தேடிப்போய்
பூமியின் மடியில்
புதையல்களாகி
விட்டவர் போல்
என் மன
இரகசியத்தை
கண்டுபிடிக்க வந்து..! நீ
ஒரு இரகசியம் ஆகிவிடாதே...
என் "இதய சிலம்பை" எடுத்து
நான் உடைக்கும் போது...
நீ வேண்டாம் என்றே
விண்ணப்பித்துக்கொள்...
ஏனெனில்..,
உள்ளிருப்பது
என் முத்தல்ல..
மற்றவர் நினைவின்
மாணிக்கம் ,
எனத்தெரிந்தால்..
உன் மனம் தாங்காது.

By :ViswA

என்னை நானே தொலைத்தேன்..!


ஏதேதோ... சிந்தித்து..

எதுவெதுவோ.. ஆ(க்)கி

எங்கெங்கோ.. அலைந்து..

எப்படியெல்லாமோ.. ஆகி...

என்னை நானே தொலைத்தேன்..!

என்னை.!!! வெளிக்காட்டமுடியாது...


by :ShArU

கண்ணீரின் கையொப்பம்..!


பிரிவு என்பது

கண்ணீரின் கையொப்பம்..!

வானத்தை விட்டு

மேகம் பிரிகிறது

மழை என்ற கண்ணீருடன்..

மலைகளை விட்டு

அருவி பிரிகின்றது

நதி என்ற கண்ணீருடன்...

இசையை விட்டு

பாடல் பிரிகின்றது

ஸ்வரம் என்ற கண்ணீருடன்...

வாழ்க்கையை விட்டு

உயிர் பிரிகின்றது

மரணம் என்ற கண்ணீருடன்.
by :ShArU

Aruvumathi Kavithi "மௌனம்"


அற்புதமான

காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மௌனத்தையும்

நீதான்......

எனக்குத் தந்தாய்.2 Jun 2010

என் தனிமையில் இன்றும் நீ...!!
என் காதலை இந்த
பழாய்போன கண்கள்
காட்டிகொடுத்துவிடும்
என்பதாலே உன்னை நான்
அருகில் பார்ப்பதில்லை...
மனதில் பூத்தது எப்போதென்று
இன்று வரை அறியேன்
நான் … உன்
கண்ணீரை கண்டு
என் மனம் பதறிய போது
உணர்ந்தேன் நான்..
நீ என்னை
கடந்து செல்லும் பொழுது மட்டுமே
சுவாசித்திருகிறேன் பல சமயங்களில் …
தெரியாமல் படர்ந்த
உனது ஸ்பரிசத்தினால்
என் நிழலும் வெட்கப்பட்டு கண்டிருக்கிறேன் …
இரவில் பூமி சுழலும் சத்தத்தை
கேட்டிருகிறேன்
மறு நாள் உனை கான
நான் காத்திருக்கும்பொழுது…
காற்றில் தென்னங்கீற்று
பேசும் பாஷையை புரிந்து கொண்டேன்
உன் ரசனைகேற்ற வாழ்க்கை
வாழ பழகிகொண்டேன் ..ஆனால் ..
நீ வேறு பாதை தேடி கொண்டாய்…
நாட்கள் கடந்துவிட்டன..
உன்னை எனக்கு முழுதாக கற்றுகொடுத்த
என் தனிமையில் இன்றும்...
நீ வந்து சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய் ….!!!!!!!!!!!!

-VJ

1 Jun 2010

உன் நினைவுகளில்..!
என் கனவில்
நீ வருவதால்
மூடிய கண்களை
திறக்காமல் இருக்கிறேன்...!
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு...!!
என் இரவு உனக்காகவே
விடிகின்றன...
இமைகளை விரிக்காமல்
வேறேதும் நினைவில்லாமல்
உறங்காமல் உறங்குகின்றேன்...!
உன் நினைவுகளில்... ... ...

இதயச் சிறையில்...!
பெண்ணே உன்னை
ஒவியமாக ஒப்பிட்டால்
பலரின் பார்வையில்
நீ பாதிப்படையலாம்...
பூவுடன் ஒப்பிட்டால்
மலர்வதும் மடிவதுமாக
நீ வாடிவிடலாம்...
நிலவுடன் ஒப்பிட்டால்
வளர்பிறை தேய்பிறையாய்
நீ துன்பப்படலாம்...
காற்றுடன் ஒப்பிட்டால்
சிலரின் செயலால்
நீ நச்சாகி விடலாம்...
புவியுடன் ஒப்பிட்டால்
இவ்வுலகின் தீயவர்களால்
நீ சுமைதாங்கியாகலாம்...
ஆகவே...
உன்னை என்
இதயச் சிறையில் பூட்டி
பாதுகாக்கிறேன்...!

-சுபஸ்ரீஸ்ரீராம்.

கனமில்லா கனவுகள்


தொடக்கம் ஆரவாரமாக

முடியும் ஆர்பாட்டமாக

இடைப்பட்ட வாழ்க்கை

பல இன்னல்களும்

சில இன்பங்களும் நிறைந்து ...

கடந்து வந்த பாதைகளை

கவலையோடு நினைத்து

எதிர் வரும் பாதைகளை

எதிபார்போடு எதிர்த்து

நிகழ்காலத்தை நினைவுகளில்

தொலைத்து கொண்டு

நிரந்திரம் இல்லாமல்

நித்திரை இல்ல்லாமல் ....

அத்தணையும் காற்றோடு

கரைத்துவிட்டு களிப்போடு

இருக்க கனமில்லா கனவுகளோடு

உலாவர ஒற்றை புன்னகை

உதிர்த்து செல்லுங்கள்

ஓராயிரம் அர்த்தங்கள்

புதைந்து இருக்கும்!