25 Dec 2010

உன்னால்...?

உறவுகளின் தவிர்ப்பு....


தனிமையாய் இருந்திருந்தால்
தவிர்ப்புக்கள் குறைந்திருக்கும்..
உறவுகளின் தவிர்ப்புக்களால்
சிதைந்து போகிறது - இவள் எண்ணங்கள்
உன் நினைவுகள் - எனை
அழிப்பது ஒரு புறமிருக்க ..
என்னை சுற்றி இருப்பவர்களினது
சுட்டெரிக்கும் வார்த்தைகளும்
எனை சுடுகாடு வரை செல்ல
தூண்டுகின்றது..
வாழ்க்கை  என்னை
உன்னுடன் வாழ விடவில்லை..
இன்று உன்.....
 நினைவுகளுடனும்
வாழவிடுவாதாய் இல்லை..
இன்று.......
தோற்றுபோனது... என்
காதல் மட்டுமல்ல..
என் தன்னம்பிக்கையும் தான்..
மன்னித்துவிடு - நீ இன்றி
வாழ்ந்து கொண்டிருக்கும்..
ஒவ்வொரு விநாடியும்..
என்மேல் எரிமலைத்துகள்கள் தான்
வந்து விழுந்த வண்ணம் இருக்கின்றன..
இங்கு மனிதர்கள் மட்டுமல்ல
மனித நேயங்களும் தான்
கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன..

7 Dec 2010

தவறு..


அறியாமல் நீ செய்த தவறு.. 
உன் காதலைப்பற்றி
 என்னிடம் தெரிவித்தது..
அறிந்தே நான் செய்த தவறு
உன் காதலால் - என் 
காதலை வெறுத்தது..
காரணம் நம் காதலன் ஒருவனே...
இன்று  
அவன் தான் என்னுடன் 
இல்லையே தவிர- அவன் 
நினைவுகள் என்றும் என்னுடன்..


29 Nov 2010

நட்பு.

Friend

காதல் என்பதை தவறாக
உணர்ந்துகொண்டேன்
இது காதலனிடம் மட்டுமே
வரும் என்று !!!
என் நண்பர்களை பார்த்த பின் தான்
தெரிந்தது
அது நட்பின் மறு
பெயர் என்று !!!!!

காத்திருக்கிறேன்...

1978784qfev7gqazs.gif

உனக்காக காத்திருக்கிறேன் ..
கனவாகிப் போனது - என்
 எண்ணங்கள் மட்டுமல்ல ..
 காலங்களும் தான்..
இன்றும் காத்திருக்கிறேன். ...!
என் காத்திருப்பில்..
சந்திக்கின்றேன் பலரை..
சந்திக்க விரும்பிய..,
உன்னைத்தவிர..
அனைவரையும்.


By : ShAru

25 Nov 2010

கவிதையுடனான பந்தம்


உன் உணர்வுகளை 

இந்தச் சமூகம் 

புரிந்து கொள்ளாமல்

காயப்படுத்திவிடும் 

என்கிற தவிப்பினால் 

நிறுத்திவிட்டாயோ 

கவிதையுடனான 

உன் பந்தத்தை........?


கனவு....

கனவுக்குள் சுமந்தவனை...
கனவோடு தொலைத்து..
தவித்த  இவள் இதயத்தை ...
உருமாற்றியவனையும்
எங்கோ ...!
தவற விட்டு தவிப்பவளை
என்னவென்று சொல்ல...?

bY: ShArU

14 Nov 2010

நிஜமான கற்பனை…
எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி  !

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !

ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று
நான் உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…

by: piRiyan

29 Oct 2010

கலைந்து போனது...

அன்று 
கருவோடு.... - என்
காதல் கலைந்து போனது.. 
இன்று 
உயிரோடு கலந்து
உறைந்து போகின்றதே..
என்...,
காதலை சுமக்க -  நான் 
என்ன தாய்மை அற்றவளா..?
இல்லை தகுதி அற்றவளா..?


by:- ShaRu

27 Oct 2010

என்னை ஆசீர்வதி....


நான் 
எரிமலையிலிருந்து தான் 
தோன்றியிருக்க  வேண்டும் 
ஆம்... ! அப்படித்தான் இருக்கும்..
இல்லையேல்..?
எனக்குள் இருக்கும் நெருப்பு 
எப்படி வந்தது..?
யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்..
எனை எவரும் வேரோடு 
பிடுங்கி எறிய அனுமதியாமலும்...
நான் செய்யும் 
போரின் வேர் உன்னுடையது தானே..! 
உரிமைப்போரில் 
உன் காதல் தோற்றுப்போகாதிருக்க ..
எந்த வேளையிலும் 
உன்னை இழக்காமலிருக்க ..
என்னை ஆசீர்வதி..

நீ ..!


நீ ..! 
உன் நினைவுகள் ..!
என்னை மட்டுமல்ல
என்னை சுற்றி இருப்பவர்களையும் 
சிதைத்துக்கொண்டிருக்கிறது.
by : Sharu


என்னுள் நீ... தீயாக ..


ஆடலும் பாடலும் 
வெளியில் மட்டுமே 
என்னுள் நீ... தீயாக 
 கனன்று கொண்டு இருக்கின்றாய்..
சுற்றி இருப்பவர்களை
 சுட்டெரிக்கும் ..,
அபாயம் உள்ளதால் தான்.. 
விலத்தி வைக்கிறேன் 
ஒவ்வொரு உறவாக 
இன்று.......!


by : sHaRu..

21 Oct 2010

தோல்வியின் வலி...


என் தோல்வியின்  
வலி எனக்கு மட்டுமே 
சொந்தமானது .. 
அதை.
 உன்னிடம் தெரிவிக்க - என் 
மனதிற்கு இஸ்டமில்லை...  
ஏனெனில் ..
வலியின் வலியை 
வலிமையாக
 புரிந்தவள் இவள்....! 


by : - ShaRu

5 Oct 2010

கடைசி மழைத்துளி..

Aono Pictures, Images and Photos

கடைசி மழைத்துளியும்
 நீ 
கைகள் ஏந்தி 
ரசிக்கும் வரை 
தெரியவில்லை.. 
மழைத்துளியில் - உன் 
கண்ணீர்த் துளியும் 
கலந்து இருப்பதை..
முடிந்தது என்பது
 இறந்து போனது..
அதை ....
தினமும்........
புதிதாக்கிப் பார்க்கிறாய், 
உனக்கு ....,
இஸ்டம் இல்லாமலேயே!!!

by : - MiRun

4 Oct 2010

உனக்காகவேஎன்னை நீ
வாசிக்காமல் போனதில்
கவலைப்பட்டதில்லை நான்
உனக்காகவே
என்னை மொழியாக்கி
எழுதிய கவிதையை நீ
கிழித்தெறிந்ததில்தான்
கண்ணீர் சிந்தினேன்
உன்னால் முதல்தரம்
*
என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது
உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர
*
உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்
ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது
*
யார் யாரோ என்னை
பறித்த போதெல்லாம்
உன்னோடுதானே
இருந்தேன்
எப்படி முடிந்தது
என்னை வேரோடு
பிடுங்கி
எறிந்துவிட்டு போக
*
என்னைப்போல்
உனக்காக
யாருமில்லை என்றாய்
உண்மைதான்
உன்னைப்போல் யாரும்
என்னை பொய்சொல்லி
ஏமாற்றியதில்லை

 
by :- -யாழ்_அகத்தியன்

3 Oct 2010

இவள்..

sad_girl Pictures, Images and Photos


இவள்
வாழ்வில்
சந்தேகம்
தீயாக எரிந்து
கொண்டிருக்கையில்
சந்தர்ப்பங்கள்
எண்ணையாக
அல்லவா.........,
ஊற்றப்படுகின்றன..

ஓர் ஒளியாய் ...

மணிக்கணக்காக 
இருந்து......
முயற்சி செய்தும் 
உன்னை மறக்கமுடியவில்லை.. 
எனக்குள்
உன் நினைவுகள் 
ஆழமாக பதிந்து விட்டன..
உன் பார்வை 
என் இதயத்துள் 
ஓர் ஒளியாய்....
தற்போதும் 
சுட்டெரித்துக்கொண்டிருக்கின்றது..


by :- viswa

நீ...

sad.gif Pictures, Images and Photos

நீ எனக்கு செய்த 
எந்த தீமையாயிருந்தாலும் 
அதெல்லாம்..
என்மனம் ஏற்று தாங்கியது..
ஆனால்..,
நீ என்னை சந்தேகப்படுவது தான் 
ஏற்றுக்கொள்ள முடியாத
ஒன்றாகி விட்டது.. 


by :- viswa

மனசாட்சி...
மரணித்தவன் மரணதேவன்
மனித வாழ்வில்
முகவரி
எழுத முன்னரே..
முடிவுரை எழுதி
முத்திரையிடப்பட்டு
மண்ணில் மூடி
வைக்கப்படுகின்றது.
மனித உடல்..!
எத்தனை எத்தனை
இளம் கவிதைகள் - அத்தனையும்
அநியாயமாக அபகரிக்கப்பட்டு
மண்ணிற்குள் நல்லடக்கம்.
இதனை நினைத்திடும்
பொழுதெல்லாம்
என் நெஞ்சத்துள்
எப்போதும் நில நடுக்கம்
என் ப்ரியமானவனே..
நிரந்தரமான நித்திரையில்
நீயிருக்க
ஓய்வின்றி ஓசையிடும்
கடல்அலையாக
மனதில் ஆர்ப்பரிக்கும்
ஆத்திரத்துடன்
அழுகையையும் அடக்கிவைத்து..
புறம் தனில் புன்னகை பூத்த
முகத்தோடு - நான்
நடிக்கின்ற ஒவ்வொரு
நிமிடமும்.....
உலக சாதனைக்குரியது தான்.


by :- viswa

நடைப்பிணமாக..


என் உயிரை
உனக்கு தந்து விட்டு
நான்....
நடைப்பிணமாக  தானே
அலைந்தேன்.. - நீ
என் உயிரைக் கொண்டு
ஓடிவிட்டாயா..- இல்லை
தொலைந்து விட்டயா...?

by:- viswa

விலாசம் இழக்கிறது..

என் 
விழியின் பார்வை 
விலாசம் இழக்கிறது...
உடலுக்குள் இருக்கும் 
உயிர் மழை 
சொட்டுச்சொட்டாய்
ஒழுகி வடிந்து கொண்டிருக்கிறதே.நீயே தான்...

Sad Girl Pictures, Images and Photos


என்னை விட்டு 
பிரிந்து சென்றது
 நீ தானே தவிர 
என் காதல் அல்ல.... 
என் இதயத்திலிருந்த
தாஜ்மகாலிலிருந்து 
அகன்றது..!
நீயே தான் தவிர 
என் தாஜ்மகால் அல்ல..

நீ மட்டுமல்ல.

Sad Pictures, Images and Photos

விலகிச்செல்வது
நீ மட்டுமல்ல..
உன்னோடு சேர்த்து
என் எதிர்காலமும் தான்.

25 Sep 2010

இதயம்...

"இதயத்தை 
இரும்பாக தான் 
வைத்து இருந்தேன் … 
யாருக்கு தெரியும் 
காந்தமாக 
இருப்பான் என்று ...! "

எங்கே என் நட்பு...?

நட்பை எதிர்பார்த்து 

தனிமையில்
வருந்தி
கொண்டிருக்கும் போது
என் பக்கத்தில்
என்
செல்ல பூனை
என்னை
ஒரு பார்வை
பார்த்து விட்டு திரும்பியது
இன்று தான் அதற்க்கு
அர்த்தம் புரிந்து கொண்டேன்.... !
நானிருக்க உனக்கு
வேறோரு நட்பு தேவையா என்று...
வருந்துகிறேன்..
அந்த நட்பும்
இன்று இல்லை என்று ........


மறந்தவர்களுக்கு .....


மறந்தவர்களுக்கு
நினைவுகள் ஒரு பாலம்
மறுபடியும் சந்திக்க அல்ல
துவண்டு விடாமல் இருக்க

நினைக்க மறுப்பவர்களுக்கு
நிழல்கள் கூட தூரம் தான்
இவர்கள் சந்தித்தாலும்...

21 Sep 2010

கண்ணீரானது....!
உனக்காய்
காத்திருந்த போது
கால்கள் வலித்தன
அந்த நிமிடம்
கவிதை ஆனது!

இன்றோ
உனக்காய்
காத்திருக்கிறேன்!
இதயம் வலிக்கிறது
இந்த யுகங்கள்
கண்ணீரானது....!


மௌனம்

 


பக்கம் பக்கமாய்
பேச நினைக்கிறேன்...
ஆனாலும் நீ
பக்கத்தில் வரும்
போது முந்திக் கொள்கிறது ...

.........மௌனம்...............உனது நட்பின் ஆழம்


எனது வெள்ளை காகிதங்களில்
கவிதைகளை நிரப்புவது
உன் நினைவுகள் மட்டுமே
வெறும் உறவென்றால்
மறந்து விடுவேன்
என் உயிர் துடிப்பதை
எவ்விதம் மறப்பேன்??
பிரிவு அது என்றுமே
நம்மில் தோற்று போகும்


உன்னை நிழலாய்
தொடர நினைக்கும்
என் நட்பு
உன் இதயம் தன்னில்
மறைந்து கொண்ட
சோகங்களை
தோண்டி எடுத்து
என்னுள் புதைத்து கொள்ள
விரும்புகிறது
நான் பார்க்க
நீயாவது புன்னகை அணிந்து கொள் ...!!!
பிரிவுக்காலம்
எப்போதும் அதில்
உன் நினைவுகளின் துணை
கொண்டு சிரித்துகொள்கிறேன்
இல்லை என்றால்
சிரிக்கவே மறந்திருப்பேன்


எனக்குள் வாழ்ந்து கொண்டு
எனக்காய் துடிக்கும்
உனது நட்பின் ஆழம்
கண்டு கண்ணீர் வடிக்கிறேன்
என் அருகில் நீ இல்லை என..!


எழுதியவர் :கார்த்திக் . 

17 Sep 2010

அடம் பிடிக்கிறது கண்கள்..


அழ வைப்பது 

அவன் தான் 

என்று தெரிந்தும்..

 அடம் பிடிக்கிறது கண்கள் 

அவனை தான் 

காண வேண்டும் என்று...

திரும்பிப்பார்க்காதே...காதலே..
மீண்டும் என்னை
திரும்பிப்பார்க்காதே..
இழப்பதற்கு இனி
என்னிடம்
எதுவும் இல்லை...

விலைமதிப்பில்லாத முத்துக்கள் ..கடல் மணலில்
நம் காதலை
எழுதி வைத்தேன்..
அலை வந்து
அடித்துச்சென்ற போது
சொன்னது..
விலைமதிப்பில்லாத
முத்துக்கள்
எனக்கே சொந்தம் என்று......

15 Sep 2010

"எதிரில்" பார்க்க..


உன்னை "எதிரில்" பார்த்த
நாட்களை விட
"எதிர்" பார்த்த
நாட்கள் தான் அதிகம்..
இன்னும்
உன்னை நான்
"எதிர்" பார்க்கின்றேன்
"எதிரில்" பார்க்க..

என் இதயம்..!
சூரியனை பார்க்காமல்
பூக்கள் மலர்வதில்லை..
அதுபோல்..
உன்னை நினைக்காமல்
என் இதயம்
துடிப்பதில்லை...

13 Sep 2010

தினம் தினம் தீக்குளிக்கின்றேன்!


சீதை ...,
ஒரு தடவை தான்
தீக்குளித்தாள்...
ஆனால் நானோ...
நீ போடும் அட்சதைகளால்
தினம் தினம்
தீக்குளிக்கின்றேன்!

7 Sep 2010

அனைவரும் உறங்கும் நேரம் ....
அனைவரும்
உறங்கும் நேரம்
எனக்கிது....
தலையணை.,
நனைக்கும் நேரம்....

6 Sep 2010

நான் .., மரித்துப்போகும் வரை,


சொன்ன கவிதைகள்
சில ...
மனதோடு
மறைத்து வைத்த வரிகள்
பல....
என்னோடே போகட்டும்
அவை...
உனை
மறந்து போகும் வரை ..
நான் ..,
மரித்துப்போகும் வரை.

சுதந்திரப் பறவையும் நானும்..


சுதந்திரப் பறவையும்
நானும் ஒன்று ....
இருவருக்கும்..,
இருக்க நிலையான
இருக்கை இல்லை...

3 Sep 2010

இது தான் வாழ்க்கை...


ஒரு உயிர்
துடிக்கும் பொழுது...
யாரும்..,
கவனிக்க மாட்டார்கள்..
ஆனால்
நின்ற பிறகு...
எல்லாரும் துடிப்பார்கள்
இது தான் வாழ்க்கை...!

பிணமாய் அலைகின்றேன் ....
உடலில்
உயிர் இருந்தும்
பிணமாய்
அலைகின்றேன்
என் அருகில்
நீ .....,
இல்லாததால்..

நீ இல்லாததால்..
அன்று
கண்ணீர் கூட
சுகமானது துடைக்க
நீ இருந்ததால்..
இன்று
சிரிப்பு கூட
சுமையானது..
ஏனெனில்
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாததால்..

bY:-Viswa

நெஞ்சோடு உன் நினைவு...என்னோடு நீ
இருந்தாலும் ...
இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்...
உன் நினைவுகளை.!

25 Aug 2010

உன் கடைசி நேரப்பார்வைக்காய்...

இப்போது என் இதயம் கூட
இயங்கவில்லை - உன்
கண்பார்வை படாமல்...
விழிகள் வீசி வீசி
எனை கொன்ற காலங்கள் போக
உன் பிரிவில் .....
இன்று என் உயிர் பிரியும் நேரத்தில்
உன் ஓரவிழிப்பார்வை கூட கிடைக்காதா....!
என் வலிகள் கூட எனைப்பார்த்து சிரிக்கின்றன...
உனைபார்த்து கண்ணீர் சிந்த ஒரு கண்கள் இல்லையே என்று..
காத்திருக்கின்றேன் உன் கடைசி நேரப்பார்வைக்காய்...

by:- MirUn

இதயபூக்கள்....,

உன் இதயத்தை
பூக்களுடன் கொடுக்கும் போது...
எனக்கு தெரியவில்லை..
அந்த பூக்களின் அடியிலும்
முட்கள் வளர்ந்து கொண்டிருந்ததை.....

by:- MiRuN

13 Jul 2010

நீ.....!


உறங்க மனமில்லை

நினைவில் நீ...

உறங்கினால்

விழிக்க மனமில்லை

கனவில் நீ.....!

10 Jul 2010

நீ மட்டும்..


உலகின்
எந்த மூலைக்குப்
போனாலும் உன்னைப்
பார்த்துக் கொண்டே இருந்திருப்பேன்…
நீ மட்டும்
நிலவாகவே பிறந்திருந்தால்!

கைவிடப்பட்ட கவிதை...


தனிமையான சில கணங்களில்

இதயத்தின் நான்கு அறைகளிலிலும்

சூழ்ந்து கொள்ளும்

வெறுமையின் கனம்

தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி உறக்கத்துக்கு

ஓடிய விழிகளும் கூட

இப்போதெல்லாம் வெறும்

நினைவுகளை சுமந்தபடி

விழித்திருப்….

....

...

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


இப்படித்தான்…

முழுக்கவிதையும்

வாசிக்க நேர்ந்தால்,

என் துயர் தாங்க மாட்டாயென

பாதியிலேயே கைவிடப்படுகின்றன…

என் பல கவிதைகள்!

9 Jul 2010

நண்பா....,


நீ பறவை,

நான் மரம்

என்..,

கிளைகளை

காயப்படுத்திவிட்டு

உயர உயர

நீ பறப்பாய் .

காயப்பட்ட நானோ ,

கண்ணீருடன் ...!

எல்லைகளைத் தொட்டு

களைத்து...

என்றேனும்...!!!

திரும்பி வருவாய் இளைப்பாற

என்ற நம்பிக்கையில் ,

என் கிளைகள் எப்போதும் காத்திருக்கும்

உனக்காக ....


by: JeYa

29 Jun 2010

இன்று.....


நான்

நேசித்த இதயத்தில்

இன்று.....

என்னையோசிக்க

வைத்த இதயம் - நீ

20 Jun 2010

தயங்கினேன்...


விலகி போவாயோ

என்று பயந்தே

காதலை சொல்ல

தயங்கினேன்...

காதலை சொல்ல

தயங்கியதாலே..

நீ விலகி

போவாய் என்று

தெரியாது...

எதுக்கு ...!


தாய் இல்லாமல்

பாசம் எதுக்கு

வலிகள் இல்லாமல்

சாதனை எதுக்கு

கண் இல்லாமல்

கண்ணீர் எதுக்கு ...

இரவில்லாமல்

பகல் எதுக்கு

காற்று இல்லாமல்

உயிர் எதுக்கு

சூரியன் இல்லாமல்

நிலா எதுக்கு

கண் இல்லாமல்

கண்ணீர் எதுக்கு

சோகம் இல்லாமல்

சோதனை எதுக்கு

இதை எல்லாம்

உருவாக்கியவனை

மறந்த வாழ்கை எதுக்கு ...!