21 Apr 2010

தவிக்கிறது மனம்
உன்னை நான் நேசித்த போது

அழகாகத் தான் தெரிந்தது அனைத்தும்
என் மனதை இதமாகத் திறந்தது
உன் கடைக் கண் பார்வையா?
புரிந்தது.....
வாழ்வின் அர்த்தங்கள்

புத்தம் புது மலராய் மலர்ந்த
பூ நீ...!
கல்லாயிருந்த என் இதயம்
முதன்முதலாய் தோற்றது
உன்னிடம் தான்!

என் இதயத்தில்
இடம் பிடித்தாய் நீ
ஆனால் பல வேளைகளில்
உனது வார்த்தைகளால்
காயம் கண்டது
என் இதயம் ...
அப்போது தான் அறிந்தேன்
நான் வலிகளின்
வேதனைகளை

மன்னிப்பதற்கு மனமிருந்தும்
ஏற்பதாக என் மனம் இல்லை
தவிக்கிறது மனம்
காரணம் கூற இயலாது ....

எனக்காக நீயும் உனக்காக நானும்
என்று கனவு தான் கண்டேனோ?
நானறியேன் ..
உறவுகள் பல இருந்தும்
தனிமையில் இருப்பதை
உணர்ந்தேன் நான்
வாழ்ந்த நாளெல்லாம் போதுமென
புயலில் சிக்கிய பூ போன்றது
என் கதை ...

நித்தமும் நான் உன்
நினைவோடு வாழ்கிறேன்
நிழலாக..............


-பாரதி

No comments: