19 Mar 2010

வினாவாக நான்

இழந்துடுவேன்.....

இது தான் காதல் அன்பே.......உயிருக்கே உயிர் வரும்

உதிர்கையில்

மரணம் வரும்

இல்லை என்று போனாலும்

இருபதுவாய் தோன்றி கொள்ளும்

நிழல்கள் நிஜங்கள் ஆகும்

நிஜங்கள் நிழல்கள் ஆகும்

இது தான் காதல் அன்பே.......

காதல்

நீதானே

•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜.•
°*”˜ .•°*”˜.•°*”˜
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே
.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜ .•°*”˜.•°*”˜
நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே…. நீதானே என் இமைகளை நீவினாய்
.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜ .•°*”˜.•°*”˜
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே
.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜ .•°*”˜.•°*”˜
ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே
.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜.•°*”˜ .•°*”˜.•°*”˜

18 Mar 2010

உன்னை பார்த்த போது

என் சந்தோச நாட்களில் நான் சிரித்திருந்த போது
என்னைச் சுற்றி பல சிரிப்பொலிகள்.
எனக்காய் இத்தனை பேர் என்று பூரித்திருந்தேன்.
சோகத்தில் நான் துவண்டு அழுத
என்னைச் சுற்றி சில அழுகுரல்கள்
அப்போது
விழியோர நீர் துளியுடன் நீயும் நின்றாய்
அந்த சோகத்தில் கூட சுகமான
மகிழ்வு கிடைத்தது உன்னை பார்த்த போது.

காதல் வலிகள்!

"தனிமையில் நான் இருந்த போது
என் இதயம் பேசிய
மெளன வரிகள் தான்
இந்த காதல் வலிகள்!"

15 Mar 2010

நீ எங்கேிரிவின் வலியில்

எழுதிய வரிகள் ஜாபகம்

வருகிறது.......

''பேசி பேசியே என்னை

ஊமை ஆகினாயே ! உன்னோடு

பேச வேண்டும்...

நீ எங்கே?

14 Mar 2010

நான்...
காதலித்து பார்த்தேன்
அஸ்தமனங்கள் கசத்தன
பிரிய வேண்டுமே என்ற தவிப்பில்
விடியல்கள் இனித்தன
சந்திப்புகளின் புத்துணர்ச்சியில்
கண்ணாடிக்கு கண் வலித்தது
அழகு பார்த்த மணி நேரங்கள் அதிகரித்ததால்
தொலைபேசிக்கு செவி வலித்தது
மீண்டும் மீண்டும் பரிமாறிய
அதே காதல் வார்த்தைகளால்
மழைதூறலாய் மலர்சாலையாய்
உனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்
எதிர்காலம் இனித்தது இன்ப கனவுகளில்
கூட்டங்களும் கூச்சல்களும் கசத்தன
தனிமை பிடித்தது
தனிமையில் புன்னகைக்க பிடித்தது
பூக்கள் பிடித்தது
பனித்துளி பிடித்தது
மொத்தத்தில் பைத்தியம் பிடித்தது
காலச்சக்கரத்தில் காட்சிகள் புதைந்தன…
ஊமைக்கனவுக்கும் முடிவு வந்தது
வண்ண நிலவின் தவங்கள்
வனாந்தரங்களிலும் பாலை நிலங்களிலும்
ஒளி பொழிவது போல்
மாட மாடங்களிலும் பூக்களின் சோலையிலும்
ஒளி பொழிவது இயற்கை…
ஒரு பூவில் தேன் கண்ட வண்ணத்து பூச்சி
அடுத்த மலர் தாவுவதும் இயற்கை
இயற்கையை தவறு சொல்ல இயலாததால்
இதுவரை நேசித்த அத்தனையுடனும்
என்னையும் சேர்த்து வெறுக்கிறேன்
தண்டனையாய்
ஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்
உண்மை கண்டேன்..
எங்கு தோற்றேன் என்று தெரியாமல்
ஏன் தோற்றேன் என்று அறியாமல்
பிரிவுடன் மரத்து போனது
இதயம் மட்டும் அல்ல அத்தனை
புலன்களும் என்று
விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
இருட்டுக்குள்ளே
அடையாளமாய் நானும்காதலித்து பார்த்தேன்

காதலித்து பார்த்தேன்

6 Mar 2010

இறைவா!

''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்''

மனசு

எனக்குச் சில வேளைகளில்
சிறகுகளும்
சில வேளைகளில் சிலுவைகளும்
இன்னும் சில வேளைகளில்
போதி மரமும் தேவைப்படுகிறது!

விடியும் பொழுதுகளில்
கண்களில் கனவுகள்
மதியம் வருவதற்குள்ளாகவே
வாடியும் போகின்றன.

வெவ்வேறு கோணங்களில்
தினம் ஒரு மனிதம்.
விமர்சன வீச்சுக்களால்
வெந்து போகிறது மனசு!


மனசொன்றும் நகமல்லவே?
வேண்டாதபோது
வெட்டி எறிவதற்கு?

மனசின் பரிமாணங்களை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

முட்களை வெறுத்தால்
ரோஜாவில் ஏது இரசனை?

பயம், பாசம்
காதல்......
ஆட்டுவிக்கிறது மனசு
ஆடுகிறோம் நாம்!

உன்னுடைய பிரிவில்