என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
27 Oct 2010
என்னை ஆசீர்வதி....
நான் எரிமலையிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் ஆம்... ! அப்படித்தான் இருக்கும்.. இல்லையேல்..? எனக்குள் இருக்கும் நெருப்பு எப்படி வந்தது..? யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்.. எனை எவரும் வேரோடு பிடுங்கி எறிய அனுமதியாமலும்... நான் செய்யும் போரின் வேர் உன்னுடையது தானே..! உரிமைப்போரில் உன் காதல் தோற்றுப்போகாதிருக்க .. எந்த வேளையிலும் உன்னை இழக்காமலிருக்க .. என்னை ஆசீர்வதி..
No comments:
Post a Comment