
காலங்கள் கடந்த பின்னும்
கால் தடங்கள் மாறாது
வேரூன்றி நிற்கிறது
மனதில் எழுந்த
தீராத நினைவுகள்
திறமைகள் பல இருந்தும்
பருவச் சுமைகளால்
தடம் மறைய நாட்கள்
தடம் மாறியே சென்றது
கற்க வேண்டிய கல்வியும்
வசதியான வாழ்வும்
புகழோடு கிடைத்தது
அகவை பல கடந்த பின் ...
வேதனை என்ற சொல்லுக்கு
அர்த்தம் ஒன்றைக் கண்டுபிடித்து
சோகம் என்ற சொல்லால்
சோதித்து
வரைவிலக்கணம் கொடுக்க
இயலாத வாழ்வினை
கவியினால் வடித்து
மற்றவர் முன்னிலையில்
அனுதாபம் அடைந்த
சுமையான நாட்களை எண்ணி
விழி சிந்தியது பனித்துளிகளை
புரண்டு படுக்கையில்
தொலைந்துபோன
தூக்கத்தை உணர்த்தியது
விழிகள்.........
மறக்க வேண்டிய நினைவுகள்
மறையாது மனதில் நின்றதால்
காரணங்கள் பல இருந்தும்
ஊமையானது வார்த்தைகள்
கடந்து வந்த
கசப்பான நாட்களை
கனவிலும் எண்ணாது
வாழ்க்கைக்கு உயிரூட்டி
புது உலகில் இவள்
பாரதி,
மண்டபம் முகாம்
No comments:
Post a Comment