7 Feb 2010

வாழ்க்கை

கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்

**************

உன் வாழ்க்கை
உனக்கான விருது,

யாரோ தைத்த
பொருந்தாத சட்டைக்குள்
நீ
நுழைய வேண்டிய
நிர்ப்பந்தம் என்ன ?

நிலம் மாறி நட்டாலும்
மல்லி
வாசம் மாறி வீசுமா ?

தோட்டக் காரன் நட்டாலும்
வீட்டுக் காரன் வைத்தாலும்
ரோஜா
பாகுபாடின்றி பூத்திடாதா ?

உன்னை நீயே
வனைந்து முடி,
உன்னை விட அதிகமாய்
உன்னை நேசிப்பவன் யார் ?

உன்னை விட அழகாய்
உன் இயல்புகள்
அறிந்தவன் யார் ?

உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் ?

உன் வாழ்க்கையின்
அடித்தளத்தை
நீயே அமைப்பதே
சாலச் சிறந்தது.

பொறு,
உன் எல்லைக்கு கள்ளி வைப்பது
உன் விருப்பம்,
அப்படியே
அடுத்தவனும் முள் தான்
வைக்கவேண்டுமென்று
முரண்டும் பிடிக்காதே.

அவன்
முள் நடுவதும்,
சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே
உன் அலைகள்
அலைய வேண்டாம்

No comments: