
இது என்னில் இருந்து
தூரமாகிப் போன
உன்னை என்னி என்னி
என்னை நானே உருக்கி
ஒரு ஓரமாய் ஊமையாய்
ஓசையின்றி மௌனத்தால்
பேசும் பாஷைகள்
அவை என் காதலுக்கு
மட்டுமே உரிமையானவை
உன் வரவுக்காய் ஏங்கி நிற்கும்
என் நெஞ்சின் ஏக்கங்கள்
நானோ உன் நினைவுகளை
வட்டமிடும் விட்டில் பூச்சியாக
இங்கே
உன்னை எதிர்பார்த்து நிற்கின்றேன்!
No comments:
Post a Comment