
என் புல்லாங்குழலின்
இனிய இசை கூடக் கலைக்கக் கூடாது
என்பதற்காக ..
நான் ஊமைப் புல்லான்குழலாய்க்
காலம் கடத்தி விட்டேன்
கடைசியாய் என் மௌனம் கலைக்கிறேன்,
வருடக் கணக்காய்
என் இதயம் சுமந்த
கனவுச் சுமையை
உனக்காக காவியமாய்த் தருகிறேன்
என் நேசத்தின் உணர்வை மதித்து
உன் இனிய நேரத்தை
நீ பகிர்ந்ததே போதும்,
முடிவுகள் நிஜமாகலாம்,
நிழலாகலாம்;
என் உணர்வுகள் மட்டும்
உன்னை நோக்கியபடியே……..
No comments:
Post a Comment