
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
23 Feb 2010
21 Feb 2010
உன் நினைவுகள்
12 Feb 2010
விட்டில் பூச்சி
10 Feb 2010
நிறுத்தி விடு...

சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான்
வெறுமனே வேதனைகளை
இசைத்துக் கொண்டிருந்த நான்
உன் வருகையால்
காதல் கானங்களை இசைக்கிறேன்...
வந்து போகும் என் காதலில்
உன்னிடம் ஒரு விண்ணப்பம்...
உன் மடி உறங்க ஒரு சந்தர்பம்
நிரந்தரமற்ற என் நின்மதிகளில்
நீயாவது நிரந்தரமாக தங்கிவிடு...
உனது வருகையும் உறுதியற்றது என்றால்
உன் மடி உறக்கத்தின் போது
எனது இறுதி மூச்சை உதிர்த்து
விடுகிறேன்...
9 Feb 2010
7 Feb 2010
வாழ்க்கை
கவனிப்பில்லாமல்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்
**************
உன் வாழ்க்கை
உனக்கான விருது,
யாரோ தைத்த
பொருந்தாத சட்டைக்குள்
நீ
நுழைய வேண்டிய
நிர்ப்பந்தம் என்ன ?
நிலம் மாறி நட்டாலும்
மல்லி
வாசம் மாறி வீசுமா ?
தோட்டக் காரன் நட்டாலும்
வீட்டுக் காரன் வைத்தாலும்
ரோஜா
பாகுபாடின்றி பூத்திடாதா ?
உன்னை நீயே
வனைந்து முடி,
உன்னை விட அதிகமாய்
உன்னை நேசிப்பவன் யார் ?
உன்னை விட அழகாய்
உன் இயல்புகள்
அறிந்தவன் யார் ?
உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் ?
உன் வாழ்க்கையின்
அடித்தளத்தை
நீயே அமைப்பதே
சாலச் சிறந்தது.
பொறு,
உன் எல்லைக்கு கள்ளி வைப்பது
உன் விருப்பம்,
அப்படியே
அடுத்தவனும் முள் தான்
வைக்கவேண்டுமென்று
முரண்டும் பிடிக்காதே.
அவன்
முள் நடுவதும்,
சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே
உன் அலைகள்
அலைய வேண்டாம்
கதறும் குழந்தையாய்
தவித்துக்கிடக்கின்றன....
உனக்கான
என் கவிதைகள்
பிரிவுகளினும்
ரணம் கூட்டும்
இந்த வரிகளையாவது
வாங்கிக்கொள்
**************
உன் வாழ்க்கை
உனக்கான விருது,
யாரோ தைத்த
பொருந்தாத சட்டைக்குள்
நீ
நுழைய வேண்டிய
நிர்ப்பந்தம் என்ன ?
நிலம் மாறி நட்டாலும்
மல்லி
வாசம் மாறி வீசுமா ?
தோட்டக் காரன் நட்டாலும்
வீட்டுக் காரன் வைத்தாலும்
ரோஜா
பாகுபாடின்றி பூத்திடாதா ?
உன்னை நீயே
வனைந்து முடி,
உன்னை விட அதிகமாய்
உன்னை நேசிப்பவன் யார் ?
உன்னை விட அழகாய்
உன் இயல்புகள்
அறிந்தவன் யார் ?
உள்ளுக்குள்
முத்திருக்கும் உண்மையை
சிப்பியை விட அருகில்
சீக்கிரமே உணர்வது யார் ?
உன் வாழ்க்கையின்
அடித்தளத்தை
நீயே அமைப்பதே
சாலச் சிறந்தது.
பொறு,
உன் எல்லைக்கு கள்ளி வைப்பது
உன் விருப்பம்,
அப்படியே
அடுத்தவனும் முள் தான்
வைக்கவேண்டுமென்று
முரண்டும் பிடிக்காதே.
அவன்
முள் நடுவதும்,
சந்தன மரம் நடுவதும்
அவனுடைய இலட்சியக் கடல்.
அங்கே
உன் அலைகள்
அலைய வேண்டாம்
காதல்...
5 Feb 2010
கனவுச் சுமை

என் புல்லாங்குழலின்
இனிய இசை கூடக் கலைக்கக் கூடாது
என்பதற்காக ..
நான் ஊமைப் புல்லான்குழலாய்க்
காலம் கடத்தி விட்டேன்
கடைசியாய் என் மௌனம் கலைக்கிறேன்,
வருடக் கணக்காய்
என் இதயம் சுமந்த
கனவுச் சுமையை
உனக்காக காவியமாய்த் தருகிறேன்
என் நேசத்தின் உணர்வை மதித்து
உன் இனிய நேரத்தை
நீ பகிர்ந்ததே போதும்,
முடிவுகள் நிஜமாகலாம்,
நிழலாகலாம்;
என் உணர்வுகள் மட்டும்
உன்னை நோக்கியபடியே……..
4 Feb 2010
காதலுடன் நான்!

தோளில் நீ சாய்கையில்
சில்லென்று ஒரு தென்றலும்
என்னை சுற்றி சுழன்றது,
என் கை பிடித்து நடக்கையில்
பரந்த வானமும் எந்தன்
காலடியில் சிறைப்பட்டது,
ஒவ்வொரு புன்னகை பூவிலும்
ஆயிரம் மலர்கள்
என்னுள் பூத்தது,
ஆயிரம் வேள்விகள் புரிந்தாலும்
கிடைக்கா வரமா நீ?
உன் நினைவுகள்
என்னுள் கலந்திட,
உன் வெறுமை அனலாய் எரித்திட
காதலுடன் என்றும்
நான்!
Subscribe to:
Posts (Atom)