
எனக்குச் சில வேளைகளில்
சிறகுகளும்
சில வேளைகளில் சிலுவைகளும்
இன்னும் சில வேளைகளில்
போதி மரமும் தேவைப்படுகிறது!
விடியும் பொழுதுகளில்
கண்களில் கனவுகள்
மதியம் வருவதற்குள்ளாகவே
வாடியும் போகின்றன.
வெவ்வேறு கோணங்களில்
தினம் ஒரு மனிதம்.
விமர்சன வீச்சுக்களால்
வெந்து போகிறது மனசு!
மனசொன்றும் நகமல்லவே?
வேண்டாதபோது
வெட்டி எறிவதற்கு?
மனசின் பரிமாணங்களை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
முட்களை வெறுத்தால்
ரோஜாவில் ஏது இரசனை?
பயம், பாசம்
காதல்......
ஆட்டுவிக்கிறது மனசு
ஆடுகிறோம் நாம்!
No comments:
Post a Comment