நினைவூட்டியபடி விழுகின்றன...நான் தவறவிட்ட தருணங்கள்!!
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
4 Jul 2012
வழக்கம் போல்.
என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
சேமித்த வசனங்களை
என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிரித்து
வார்த்தைகளை ....
தொலைத்து நிற்பேன்
வழக்கம் போல்.
கண்கள்
என் கண்களை
நான் இழக்க மாட்டேன்
இந்த உயிர்
தத்தளிக்கும் போது
வழி சொல்வது
என் கண்கள்தான்.......
நீ
சின்னப் பிரிவிற்குள்
நீ
சிதைந்து போனதை
பார்த்தாயா....?
காதல் தேவதை
"உன் கால்களை
சுற்றி வந்த
காதல் தேவதை- இவள்
வேர்கள் காய்ந்து
பூவுதிர்ந்து
கிடக்கிறாள்...!
காத்திருப்பேன்
"உன்னை
காணும் வரை....
எந்நாளும்
எதிர்பார்த்து
விழி மூடாது
காத்திருப்பேன்".
27 May 2011
மெழுகுவர்த்தி போல் ...!
உயிரென்று...!
உன்னை நினைத்து
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்..
எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்;
உன்னையும் மறக்கமுடியவில்லை..
21 May 2011
நான் நீயாக
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்
நானாக இருந்த
காலம் ஒன்று,
நான்
நீயாக மாறிய
காலம் மற்றொன்று.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)