26 Jan 2010



அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவை நான்
சிறகுகள் எனக்கிருந்தும்
சிறகடிக்க தெரியாது தவித்தேன்
வானத்தில் பறக்க ஆசை வந்தும்
தனிமையில் பறக்க வெறுத்தேன்..!!

பறக்கும் பறவைகளை கண்டு
பலநாட்கள் ஏங்கினேன்.
என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை
என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது..

எனக்கு பறவை மொழி கற்று தந்தது
நானும் கற்றேன் மொழியை...
மறந்தேன் என் தாய் மொழியை

இறக்கைவிரித்து பறந்தேன்
வானத்தில் பறந்த போது
என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே
சின்னதாகவே இருந்தன..

நிஜத்தை தொலைத்தேன்
நிழலாக பறந்தேன் வானத்தில்..
நிஜம் எது நிழல் எது என
குழம்பினேன் நானும்..

நந்தவனத்தில் இருந்த இனிமை
எனக்கு கிடைக்கவில்லை வானில்
நிஜத்தை தொலைத்த போது
நிழல்களும் என்னை விட்டு நீங்கின..!!

வானில் என்னோடு பறந்த
பறவையும் தன்னிருப்பிடம்
சென்றுவிட..

நானோ மீண்டும் அநாதையாகி
மொழி தெரிந்து மெளனி ஆனேன்
எங்கே செல்வது என்று தெரியாது
அந்தரத்தில் பறந்தபடி யோசித்தேன்..

அந்த பரந்த வானில் இன்னோர்
அழகிய பறவை சிறகடித்து
பறந்து வந்து தவித்த என்னிடம்
நிஜத்தை கற்பித்தது அன்பாக..

இன்று நான் அப்பறவையுடன்
என் அழகிய நந்தவனத்தில்
நிஜத்துடன் வாழ்கிறேன்
நிழலாக வாழாமல்..!

16 Jan 2010




..அவன் போருக்கு போனான்
நான் போர்களம் ஆனேன்..

11 Jan 2010

அர்த்தமுள்ள வாழ்க்கையை
அநியாயமாக்கிவிட்டேன்

ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
என்ற வாழ்க்கையைக்
கற்றுக்கொள்ளுங்கள்
இல்லையேல்
ஒவ்வொரு விடியலும்
தூக்குக்கைதியின் கடைசிப்
பகலைப்போல்
உங்களுக்கும்...

எட்டிப்பார்க்க முடியாமல்
தவிக்கும்
எரிபந்தம் விழுந்த
வாழ்க்கை
என் வாழ்க்கை...

ஒவ்வொரு கணமும்
ஒவ்வொன்றாக இறக்கிறேன்...

நீ இல்லை!

கனவுகளை நச்சரித்துக்கொண்டு
நினைவுகளை சுமந்துகொண்டு
நான் கஷ்டப்படும் போது
ஆறுதல் சொல்ல
இங்கு ....
நீ இல்லை!

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்...
வரும் உன்னிடம்!





கண்ணாடி வாழ்கையை
கவனமாய்
கொண்டுசெல்ல

மனசு
புதைந்த நாட்களை
மறப்போம்

வாசிக்கப்படாமல் போன
பலபக்கங்கள் கொண்டு
வாழ்கைப் புத்தகம்
எழுதுவோம்

அனுபவக்காற்றைச்
சுவைத்து
வாழ்க்கை வரம்புகளில்
வழுக்காமல்
நடப்போம்

9 Jan 2010

ஏமாற்றம்...




தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும்
இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோ என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

"வாழ்க்கைப் பாடம்"



ஆறடி மண்ணுக்குள் போவதற்கு
துடிக்கின்றாயே உன்னை
துடி துடிக்க உன்னை விட்டுச்
சென்றவனை நினைத்து....

ஒரு கணம் நில் பெண்ணே
உன் வாழ்க்கை காதல்
என்னும் சக்கரத்தை மட்டும்
சுற்றி அமைக்கப் படவில்லையே....

பரந்து விரிந்து கிடக்கும்
பூமியெங்கும் இயற்கை
விரிந்து காட்சியளிக்கின்றது
மத்தளம் போல்....

மரம் பூவையிழந்து
கனியைத் தருகின்றது....

வானம் முகிலை இழந்து
மழையத் தருகின்றது....

விறகு தன்னை எரித்து
எமக்கு ஒளி தருகின்றது...

கற்கள் பல அடிகள் தாங்கி
அழகிய சிற்பமாய் உருவெடுக்கின்றது....

ஒன்றில் இருந்து இன்னொன்றாக
உருவெடுக்கின்றது இயற்கை...

நீ மட்டும் ஏன் இழந்ததை
நினைத்து உன்னை இழக்கின்றாய்..

வாங்கும் வலிகளையும் அடிகளையும்
வாழ்க்கையின் பாடமாய் ஏற்று
உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....