"உன் கால்களை
சுற்றி வந்த
காதல் தேவதை- இவள்
வேர்கள் காய்ந்து
பூவுதிர்ந்து
கிடக்கிறாள்...!
"உன்னை
காணும் வரை....
எந்நாளும்
எதிர்பார்த்து
விழி மூடாது
காத்திருப்பேன்".
உயிரென்று...!
உன்னை நினைத்து
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்..
எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ஆனாலும்,
உருகுவதை தவிர்க்கமுடியவில்லை.
அதுபோல்;
உன்னையும் மறக்கமுடியவில்லை..
என் வாழ்க்கையை
இரண்டாகப் பிரிக்கலாம்..
நான்
நானாக இருந்த
காலம் ஒன்று,
நான்
நீயாக மாறிய
காலம் மற்றொன்று.
உன்னைக்
காயப்படுத்தியது
நான் மட்டுமல்ல ...
என் ..
கவிதைகளும் தான்..
மன்னித்து விடு ..
நம் இருவரையும்.
By: SHaru
என்
கவிதைகள்
கூட ...
விதவையாகிவிட்டது
உன் ...
கண்களின்
தரிசனம்
இன்றி..
By:
SharU