6 May 2010

பிரிவுகளே.....










சட்டென்று முடிவடையும்
ஒற்றையடிப்பாதையின்
குறுக்குச் சுவர்
மரணங்கள் !
















தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.

சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை
பார்த்தாயா....?














இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.










ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.

இது தான் காதலா..?











உன்னைப் பிரியும் வேளையில்
ஏதோ ஒரு உணர்வு - என்
விழிகளுக்குள் நீர் நிரப்பி செல்கின்றதே...












முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!













யார் கேட்டும் மறுக்கும்
என் இதயத்தை நீ கேட்க
நினைக்கும் போதே
கொடுக்க தோன்றுகிறதே
இது தான் காதலா..?







3 May 2010

தயக்கம் தண்டனைக்குரியது..



















உண்டென்றால் உண்டென்பேன்..
இல்லையென்றால் இல்லை என்பேன்..
காதலில் தயக்கம் தண்டனைக்குரியது..
காலப்பெருங்கடலில் நழுவி விழும்
கணங்களை மீண்டும்
சேகரிக்க முடியுமா உன்னால்
வினாடி கூட விரயமாதல்
கூடாது....
இப்போதும் கூட
தேசத்துரோகம் என்பதை
ஒப்புக்கொள்ளாத
தீவிரவாதி மாதிரி
உன் உள்ளிருக்கும்
காதலை ஒளிக்கவே
பார்க்கிறாய்..

2 May 2010

உன் வரவால்











உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது..
நீ பிரிந்தவேளை அதிர்வில்
என் உலகம் நடுங்கியது..
பிரிவைத் தயாரித்துக்கொண்டு தானே
காதலையே அறிவித்தாய்....?
நீ வந்து போன அடையாளமாய்
என் வீட்டில் உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்கிறது...
உன் வரவால் - என் உயிரில்
கொஞ்சம் செலவழிந்து விட்டது...
இந்த உறவின் மிசசம்
சொல்லக்கூடாத சில நினைவுகளும்..
சொல்லக்கூடிய ஒரு கவிதையும் தான்...

நம் நினைவுகள்...?















காலத்தின்
கட்டாயத்தில்
நம் கனவுகள்
கலைக்கப்படலாம்..
நம் நினைவுகள்...?

நம் சமூகம்..!









விடைதெரியாத

வினாக்களாக
நாம்...

விடைதெரிந்தும் ...

விதவைகள்
ஆக்கப்பட்டு
நம் சமூகம்..!

நாம் தமிழர்..











தேர்தலின் போதும்
நம்மைத் தேடுவர்
தேடுதலின் போதும்
நம்மைத் தேடுவர்
தேவைப்படின்
காகிதத்தில் நாம்
குத்துவோம்..
தேவைப்படேல்
காகிதம் நம்மைக் குத்தும்...
ஏனெனில் நாம் தமிழர்.