
என் பாதியில் நீ நிறையவும் உன் பாதியில் நான் நிறையவும் வினாடித்துகள் ஒன்று போதுமே
15 Mar 2010
14 Mar 2010

காதலித்து பார்த்தேன்
அஸ்தமனங்கள் கசத்தன
பிரிய வேண்டுமே என்ற தவிப்பில்
விடியல்கள் இனித்தன
சந்திப்புகளின் புத்துணர்ச்சியில்
கண்ணாடிக்கு கண் வலித்தது
அழகு பார்த்த மணி நேரங்கள் அதிகரித்ததால்
தொலைபேசிக்கு செவி வலித்தது
மீண்டும் மீண்டும் பரிமாறிய
அதே காதல் வார்த்தைகளால்
மழைதூறலாய் மலர்சாலையாய்
உனக்குள் என்னை ஆயுள் கைதியாக்கி கொண்டேன்
எதிர்காலம் இனித்தது இன்ப கனவுகளில்
கூட்டங்களும் கூச்சல்களும் கசத்தன
தனிமை பிடித்தது
தனிமையில் புன்னகைக்க பிடித்தது
பூக்கள் பிடித்தது
பனித்துளி பிடித்தது
மொத்தத்தில் பைத்தியம் பிடித்தது
காலச்சக்கரத்தில் காட்சிகள் புதைந்தன…
ஊமைக்கனவுக்கும் முடிவு வந்தது
வண்ண நிலவின் தவங்கள்
வனாந்தரங்களிலும் பாலை நிலங்களிலும்
ஒளி பொழிவது போல்
மாட மாடங்களிலும் பூக்களின் சோலையிலும்
ஒளி பொழிவது இயற்கை…
ஒரு பூவில் தேன் கண்ட வண்ணத்து பூச்சி
அடுத்த மலர் தாவுவதும் இயற்கை
இயற்கையை தவறு சொல்ல இயலாததால்
இதுவரை நேசித்த அத்தனையுடனும்
என்னையும் சேர்த்து வெறுக்கிறேன்
தண்டனையாய்
ஆனால் அடி மனதின் உள்ளிருட்டில்
உண்மை கண்டேன்..
எங்கு தோற்றேன் என்று தெரியாமல்
ஏன் தோற்றேன் என்று அறியாமல்
பிரிவுடன் மரத்து போனது
இதயம் மட்டும் அல்ல அத்தனை
புலன்களும் என்று
விழிகள் திறந்த விடியல்கள் புரியாமல்
இருட்டுக்குள்ளே
அடையாளமாய் நானும்காதலித்து பார்த்தேன்
6 Mar 2010
இறைவா!
''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்''
மனசு

எனக்குச் சில வேளைகளில்
சிறகுகளும்
சில வேளைகளில் சிலுவைகளும்
இன்னும் சில வேளைகளில்
போதி மரமும் தேவைப்படுகிறது!
விடியும் பொழுதுகளில்
கண்களில் கனவுகள்
மதியம் வருவதற்குள்ளாகவே
வாடியும் போகின்றன.
வெவ்வேறு கோணங்களில்
தினம் ஒரு மனிதம்.
விமர்சன வீச்சுக்களால்
வெந்து போகிறது மனசு!
மனசொன்றும் நகமல்லவே?
வேண்டாதபோது
வெட்டி எறிவதற்கு?
மனசின் பரிமாணங்களை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
முட்களை வெறுத்தால்
ரோஜாவில் ஏது இரசனை?
பயம், பாசம்
காதல்......
ஆட்டுவிக்கிறது மனசு
ஆடுகிறோம் நாம்!
Subscribe to:
Posts (Atom)






